Thursday, December 8, 2011

Why This Kolaveri Di பாடலைப் போல நண்பன் பாடல் வெற்றி பெற வாய்ப்புள்ளது

 
 

நண்பன் திரைப்படத்திற்காக Why This Kolaveri Di பாடலைப் போன்ற "என் ப்ரெண்ட் போல யாரு மச்சான்" பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் நாயகன் தனுஷ் பாடிய Why This Kolaveri Di பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆங்கிலம் கலந்து பாடலை உருவாக்கும் பாணியை இசையமைப்பாளர்கள் கடைபிடித்து வருகின்றார்கள்.
தற்பொழுது ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நண்பன் திரைப்படத்திற்காக "என் ப்ரெண்ட் போல யாரு மச்சான்" என்ற ஆழமான நட்பைச் சொல்லும் பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்தப்பாடல் Why This Kolaveri Di பாடலைப் போல வெற்றிபெற வாய்ப்பு உள்ளது என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வில்லு படத்தில் வெளிவராத காட்சி (வீடியோ)

 
 
 

2012 ம் ஆண்டு எதிர்பார்க்கும் படம் எது?

 
 
2011ம் ஆண்டு முடிவடைய உள்ளது 2011 ம் ஆண்டு அதிகளவான படங்கள் வெளிவந்தன அதில் பல படங்கள் வெற்றி அடைந்தன பல படங்கள் தோல்வியடைந்தன. எனினும் 2012 ம் ஆண்டு பல படங்கள் வெளிவர உள்ள நிலையில் நீங்கள் 2012 ம் ஆண்டு எதிர்பார்க்கும் படத்துக்கு வாக்கு அழியுங்கள்.

துப்பாக்கி
விஜய் காஜல் அகர்வால் இணையும் படம். இயக்கம் முருகதாஸ். இசை ஹரிஸ் ஜெயராஜ். ஆனி ஆடி மாதம் இப்படத்தை எதிர்பார்க்கலாம்.
நண்பன் விஜய் ஜீவா சிறிகாந்த் இலியானா மற்றும் பலர் நடிக்க சங்கர் இயக்கத்தில் ஹரிஸ் ஜெயராஜ் இசையில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம்.
பில்லா அஜித் நடிப்பில் உன்னைப்போல் ஒருவன் இயக்குனர் சக்ரி இயக்கம் படம். இசை யுவன் சங்கர்ராஜா.
மாற்றான்
சூர்யா காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் படம். அயன் கோ வெற்றிபடங்ககளை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கம் படம்.
கோசடயான் ரஜனி நடிப்பில் சௌந்தரியாவின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கம் அனிமேசன் திரைப்படம்.சினேகா இப்படத்தில் நடிக்கிறார். எ.ஆர்.ரகுமான் இசை.

விஸ்வருபம்
கமல் இயக்கம் மற்றும் நடிப்பில் மிக வித்தியாசமாக உருவாக்கி வரும் படம்.
3
ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஸ் மற்றும் சுருதி இணைந்து நடிக்கும் படம். ஏன் இந்த கொலை வெறி ஹிட் பாடலை கொண்ட திரைப்படம்.
நீதானே என் பொன்வசந்தம்
கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா சமந்தா நடிப்பில் மும் மொழியில் தயாராகி வரும் திரைப்படம். இசையமைப்பாளர் இன்னும் தெரியபடுதாமல் இருக்கும் திரைபடம் காதலர் தினத்துக்கு வெளிவர உள்ள திரைபடம.
வேட்டை மன்னன்
சிம்பு ஹன்சிகா நடிக்கும் இப்படத்திற்கு இசை யுவன் சங்கர்ராஜா.
தாண்டவம்
தெய்வதிருமகள் வெற்றியை தொடர்ந்து விஜய் விக்ரம் அனுஷ்கா எமி யக்சன் இணையும் படம். இசை ஜி.வி.பிரகாச்குமார்.
வேட்டை
லிங்கு சாமி இயக்கத்தில் மாதவன் ஆர்யா அமலபால் சாமிரா இணைந்து நடிக்கும் இப்படம் பொங்கல் வெளியீடாக வர உள்ளது. இசை யுவன் சங்கர் ராஜா.

<a href="http://polldaddy.com/poll/5741769/">Most expected movie of the year 2012</a>

இளைய தளபதி விஜயின் படத்திற்கு இசை அமைக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார்

 
 
இளைய தளபதி விஜயை வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கும் படத்திற்கு இசை அமைக்க இருக்கிறார் இசை இளவலான ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இயக்குனர் விஜய், நடிகர் விக்ரமை வைத்து இயக்கும் படத்திற்கு பிறகு இந்த படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.
கடந்த 2007-ல் வெளியான அஜித்தின் கிரீடம் படத்தின் மூலம் இயக்குனர் விஜயும், 'இசை இளவல்' ஜி.வி.பிரகாஷ் குமாரும் கூட்டணி அமைத்தார்கள். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு 'மதராசபட்டினம்' படத்திலும், சீயான் விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்' படத்தில் இணைந்து அசத்தினர்.
இந்த வெற்றிக் கூட்டணி நான்காவது முறையாக விஜய் படத்தில் இணைந்திருக்கிறது. இப்படத்தை சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரிக்க இருக்கிறார்.

மும்பையில் ஆரம்பமாகியது ‘துப்பாக்கி’

 
 
 
விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஜய் நடித்த 'சச்சின்' படத்தினை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தினை தயாரிக்கிறார். படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு துவங்கிய நாளில் படத்தின் விளம்பரங்கள் பேப்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எவ்வித விளம்பரமும் இல்லாமல் படப்பிடிப்பை துவங்கி விட்டார்கள். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர் படத்தை பிரபலப்படுத்த துவங்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம்.
ஏழாம் அறிவு படத்தின் அதிகாரபூர்வமான விளம்பரம் வெளிவரும் முன்பே படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. அதனால், இப்படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாவதை விரும்பவில்லையாம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

விஜயை ஏமாற்றாத ரசிகர்கள்

 
 
 
2012ம் ஆண்டில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் தமிழ் படங்கள் சில வெளியாக இருக்கின்றன.

ரஜினி - 'கோச்சடையான்', கமல் - 'விஸ்வரூபம்', விஜய் - 'நண்பன்', அஜீத் - 'பில்லா 2', சூர்யா - 'மாற்றான்', விக்ரம் - ' தாண்டவம்',சிம்பு - ' வேட்டை மன்னன்', தனுஷ் - ' 3 ', ஆர்யா, மாதவன் - ' வேட்டை ' என அனைத்து படங்களும் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

இவ்வாறு அனைத்து நடிகர்களின் படங்களும் வெளிவர இருப்பதால் ரசிகர்கள் எந்த படத்தினை அடுத்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கிறார்கள் என்று சினிமா விகடன் இணையத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பு நேற்றோடு (டிசம்பர் 06) முடிவடைந்தது.
விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'நண்பன்', அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா 2' படத்திற்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ' நண்பன் ' திரைப்படம் - 1,19, 668 வாக்குகளும், 'பில்லா-2' திரைப்படம் 1,08,339 வாக்குகளும் பெற்றன. மற்ற படங்களுக்கு கம்மியான வாக்குகளே கிடைத்தன.

Popular Posts

Popular Posts