Friday, October 28, 2011

சின்னத்திரையில் விஜய்

 
 
 
மந்திரவாதியை வச்சு மத யானையை மடக்குன மாதிரி, அம்மாம் பெரிய ஸ்டாரான விஜய்யை சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற வைத்திருக்கிறார்கள் என்றொரு தகவல் வருகிறது கோடம்பாக்கத்தின் மிக முக்கியமான இடத்திலிருந்து. இதற்கு விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்பது இருக்கட்டும்.... நிகழ்ச்சி என்ன, அதன் தரம் என்பதை அறிந்து கொண்டால், விஜய் ரசிகர்களே ஆசுவாசமாகக் கூடும்.
 
வடநாட்டையே தன் கைக்குள் வைத்திருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிதான் குரோர்பதி. நிஜமாகவே இந்நிகழ்ச்சி மூலம் துட்டு பார்த்த புத்திசாலிகள் அனேகம் பேர் இருக்கிறார்கள் அங்கே. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் அமிதாப்பச்சன் என்பதை தென்நாடும் அறியும். இதே போன்றதொரு நிகழ்ச்சியை கோடீஸ்வரன் என்ற தலைப்பில் நடத்தினார் நடிகர் சரத்குமார். அதன்பின் இதே மாதிரி நிகழ்ச்சிகளை வெவேறு சேனல்கள் நடத்திக் கொண்டிருந்தாலும் முக்கியமான சேனல் ஒன்று மீண்டும் கோடீஸ்வரன் டைப் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டதாம்.
 
அவர்களின் சாய்ஸ் விஜய் மட்டுமே. எவ்வளவு கேட்டாலும் தர்றோம் என்று பிளாங்க் செக்கையே நீட்டினார்களாம். மாட்டேன் விஜய்யும், மனசு வைங்க என்று சேனலும் மாறி மாறி பேசியதில் கடைசியில் மனம் இரங்கினாராம் விஜய். இப்போது மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இன்னும் சில வாரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம்.



இண்டர்நேஷனல் ஏஜெண்ட் விஜய் ! : கௌதம் மேனன்

 
 
விஜய் - கெளதம் மேனன் இருவரும் இணையும் படம் 'யோஹன் - அத்தியாயம் 1'. கெளதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

இந்நிலையில் இப்படம் கூறித்து கெளதம் மேனன் " 'யோஹன் - முதல் அத்தியாயம்... படத்துக்கு ஏன் அந்த பெயர் ? ஸோ சிம்பிள்! எனக்கு விஜய்யோடு முதல் சந்திப்பு சரியா அமையலை. அடுத்த இரண்டு சந்திப்புகளில் நான் சொன்னது அவரோட எண்ணத்துக்கு எட்டலை. கடைசிச் சந்திப்பில் 'இந்தத் தடவை நான் உங்களை விடப்போறது இல்லை. இனி, மிஸ் பண்ணவே வேண்டாம்'னு அவரே சொன்னார்.

நானும் அவரை வெச்சுப் படம் பண்ண ரொம்ப ஆர்வமா இருந்தேன். 'யோஹன்' ஒரு இன்டர்நேஷனல் தமிழ்ப் படமாக இருக்கும். இதில் இன்டர்நேஷனல் ஏஜென்ட் ஆக வர்றார் விஜய். எனக்கும் விஜய்க்கும் இப்படி ஒரு படம் புதுசு. வெளிநாட்டு அசைன்மென்ட்டுக்குப் போன பிறகு, யோஹனின் இரண்டு மாத அனுபவங்கள்தான் முதல் அத்தியாயம்.

அடுத்து, ஒவ்வொரு இரண்டு வருஷத்துக்கும் அதன் அத்தியாயங்களை நீட்டிக்க ஆசை. யார் கண்டா... இது ஒரு சீரிஸாகக்கூட அமையலாம். இந்தப் படத்தின் ஆக்ஷன் விஜய்க்கு செம ஃபிட்டா இருக்கும். கதையைக் கேட்டதும் ரஹ்மான் ஆர்வமா மியூஸிக் போட்டுக் கொடுத்துட்டார். உங்க எல்லாரையும் அசரடிப்பான் 'யோஹன்'!'' " என்று தெரிவித்துள்ளார்.

Vijay film's best climax ever for Velayutham

 
 
Some distributors who have watched Velayutham is reported to have said that the film's climax is going to be the best. This gives an indication that the film is all set to rock from Diwali.

Earlier Jayam Raja, the director of Velayutham had said that he is taking extra care for the climax and this care has made it one of the best, perhaps. According to sources in the Tamil film industry, Velayutham was shown to a number of distributors and everyone who has seen it could not stop raving about the climax.

It is surely going to be one of the best Vijay film climax ever.

Velayutham First Look Gallery

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Popular Posts

Popular Posts