Thursday, February 9, 2012

சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன்: விஜய் பேட்டி

 
 
 
சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன் என்று நடிகர் விஜய் கூறினார். நடிகர் விஜய் நடித்துள்ள நண்பன் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. மதுரையில் நண்பர் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் தோன்றினார். அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியிலும் பேசினார்.
 
இதையடுத்து மதுரை காளவாசலில் உள்ள ஓட்டலில் நடந்த விழாவில் கே.கே.நகரில் உள்ள "ஷைன்" மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவ-மாணவிகளுடன் நடிகர் விஜய் கலந்துரையாடினார். அப்போது மாணவர் அசோக்தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜய்க்கு வழங்கினார். விழாவில் ஆதரவற்ற பெண்கள் 2 பேருக்கு தொழில் தொடங்க நிதி உதவியை விஜய் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
கே. கடந்த சட்டசபை தேர்தலின்போது ஒரு அரசியல் கட்சியை ஆதரித்தீர்கள். நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வருவது எப்போது?
ப. அரசியல் சம்பந்தமான கேள்விகள் இப்போது வேண்டாம். தற்போது சினிமா பற்றி மட்டும் பேசலாம்.
 
கே. "நண்பன்" படம் மாதிரி மீண்டும் 2 கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிப்பீர்களா?
ப. இந்த படத்தின் கதை போல அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை தான் ஹீரோ. நாங்கள் அதற்கு பின்னணியில் தான் உள்ளோம்.
 
கே. நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?
ப. படத்திற்கு கதைதான் முக்கியம். அதுபோல ஒரு கதை அமைந்தால் நிச்சயம் இணைந்து நடிப்பேன்.
 
கே. நீங்கள் தற்போது நடிக்கும் படம் எது?
ப. "துப்பாக்கி" என்ற படத்தில் நடித்து வருகிறேன். அதுவும் சிறப்பாக அமையும்.
 
கே. தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்து குறைந்த பட்ஜெட்டில் வெளிவரும் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. அது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப. நிச்சயம் அது வரவேற்கத்தக்கது. நானும் ஒரு காலத்தில் புதிய நாயகன்தான். இவ்வாறு அவர் கூறி னார்.
 
விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், ரசிகர்மன்ற மாவட்ட தலைவர் எஸ்.ஆர். தங்கப்பாண்டியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



'துப்பாக்கி'க்கு முன் முருகதாஸ்

 
 
 
விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தினை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது.
 
தயாரிப்பாளர் சங்கத்திற்கு பெப்சிக்கும் ஏற்பட்ட பிரச்னையால் 'துப்பாக்கி' படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் விஜய் 'நண்பன்' படத்தினை விளம்பரப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளுக்கும் சென்று வருகிறார்.
 
இந்த நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு குறும்படத்தினை இயக்க முடிவு செய்து இருக்கிறார்.
 
முருகதாஸ் தன் வீட்டிற்கு வெளியே வாக்கிங் சென்ற போது ஒரு காதலர் ஜோடி பேசி கொண்டு இருந்தார்களாம். அவர்கள் பேசியதை கேட்டு திடுக்கிட்டவர், உடனே காதலர்களை மையமாக வைத்து ஒரு குறும்படம் இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.
 
அந்த குறுபடத்திற்காக பள்ளியில் படிக்கும் மாணவன் - மாணவியை தேடி வருகிறார். குறும்படத்திற்கு ஏற்றவாறு நடிகர்கள் கிடைத்துவிட்டால் 10 நிமிட குறும்படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.
 
'துப்பாக்கி' படத்தினை பொறுத்தவரை பெரும் அளவு படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருக்கிறது. இதற்கான 2 பாடல்களையும் முடித்து கொடுத்து இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.



Popular Posts

Popular Posts