Wednesday, February 29, 2012

‘துப்பாக்கி’ படத்தில் சொந்த குரலில் பாடும் விஜய்!

 

துப்பாக்கி படத்தில், ஹீரோவாக நடித்ததுடன் ஒரு பாட்டு ஒன்னு பாடியிருக்கிறார் நடிகர் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இவர்களுடன் ஜெயராம், சத்யன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையை சுற்றி நடப்பதால் மும்பையில் சூட்டிங்கை நடத்தி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்நிலையில், இப்படத்தை பற்றி தினம் ஒரு செய்தி வெளிவந்து கொண்டு இருக்கிறது. துப்பாக்கியில் விஜய் ஹீரோவாக நடித்து இருப்பதுடன், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அசத்தலான பார்ட்டி சாங் ஒன்றும் பாடியிருக்கிறார்.

இதுகுறித்து ஹாரிஸ் தனது ப்ளாக்கில் கூறியிருப்பதாவது, சும்மா ஒரு முயற்சியாகத்தான் விஜய்யை பாட வைத்தோம். ஆனால் அதுவே ரொம்ப நன்றாக வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும் ரெக்காரீடிங் தியேட்டரில் விஜய் பாடிய போட்‌டோவையும் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே விஜய் பல படங்களிலும், ரசிகர்களின் விருப்பத்திற்காக பல மேடைகளிலும் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நண்பன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இளையதளபதியுடன் இணையும் சத்யன்.

 

கொலிவுட்டில் நண்பன் படத்தின் மூலம் புகழின் உச்சத்தை தொட்ட கொமெடி நடிகர் சத்யன் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். மேலும் இயக்குநர் ஷங்கரின், நண்பன் படத்தில் தன்னுடைய நகைச்சுவை உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்த சத்யன், பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார்.

இவர் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் துப்பாக்கியில் மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறார்.மும்பையில் நடக்கும் துப்பாக்கி படப்பிடிப்பிற்காக 55 நாட்கள் நடித்துக் கொடுக்கிறார்.துப்பாக்கி படம் முழுக்க விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் இவர், வேறு எந்த படத்திற்கும் திகதிகள் கொடுக்காமல் துப்பாக்கி படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

துப்பாக்கியில் சத்யனுக்கு நகைச்சுவைக் கதாபாத்திரம் மட்டுமல்லாமல், ஒரு பிரதான கதாபாத்திரத்தை முருகதாஸ் கொடுத்திருக்கிறார்.இதனால் அதிக சந்தோசத்துடன் இருக்கும் சத்யன், நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருந்தும் அவசரப்படாமல் ஒவ்வொரு படமாக தெரிவு செய்து நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

Popular Posts

Popular Posts