இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் கத்தி, கோடரி என்று இல்லாமல் பெயருக்கு ஏற்ற மாதிரி துப்பாக்கியுடன் சுற்றி வரும் டான் கேரக்டர் விஜய்க்கு. வித்தியாச கெட்டப் என மகிழ்ச்சியில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடித்து விட்டார் விஜய்.
முதல் ஷெட்யூல் சூட்டிங்கின் போதே, முருகதாஸ் இந்த சீனை அந்த நடிகர் நடிப்பது போல் நடியுங்கள்.. இந்த நடிகர் பெர்மார்மன்ஸ்சை கொஞ்சம் இமிடேட் பண்ணுங்க என்றெல்லாம் சொல்லி கடுப்பு ஏத்தியதால் விஜய் காட்டத்தில் இருந்தார் என்பது நமக்கு தெரிந்ததே.
இந்நிலையில் மீண்டும் இருவருக்கும் முட்டிக்கிச்சு என பரவி வரும் செய்தி தான் லேட்டஸ்ட் ஹைலைட்! துப்பாக்கி படம் கைவிடப்பட்டது என பல தரப்பிலும் செய்தி கிளம்பியிருப்பதே, முருகதாஸ் மீதான காட்டத்திற்கும், விஜய்யின் கடுப்பிற்கும் காரணம்.
பெப்ஸி பிரச்னையால் முருகதாஸ் குறும்படம் ஒன்றின் தயாரிப்புப் பணிகளில் தீவிரமாகிவிட்டதால், படம் கைவிடப்பட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இயக்குநரும் ஒன்றும் சொல்லாமல் அமைதி காப்பதால், ஒருவேளை செய்தி உண்மைதானோ என்ற நினைப்பில் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் விசாரித்து வருகிறார்களாம் ரசிகர்கள் பலர்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யிடம் இதுகுறித்து ரசிகர்கள் கேட்டதற்கு, "படம் ட்ராப்னு வர்ற செய்திகளை நம்பாதீங்க.பெப்சி பிரச்சினை போன்றவையெல்லாம் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கிடும்," என்றாராம் கொஞ்சம் கடுப்புடன். செகண்ட் ஷெட்யூல் சூட்டிங்கில் தெரியும் காட்டத்தின் விளைவு என கிசுகிசுக்கிறது விவரமறிந்த வட்டாரங்கள்?!