Wednesday, February 8, 2012

நம்பர்-1 ஆக வரவேண்டும்: மதுரையில் விஜய் பேச்சு

 
 
 
அண்மையில் நண்பன் திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. மதுரையில் நண்பன் திரைப்படம் திரையிடப்பட்டிருக்கும் தங்கரீகல் தியேட்டருக்கு நடிகர் விஜய் இன்று வருகை தந்தார். முன்னதாக விமான நிலையத்தில் அவருக்கு நடிகர் விஜய் மன்ற மதுரை மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.தங்கபாண்டி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் வாழ்த்து கோஷமிட்டனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தங்கரீகல் தியேட்டருக்கு வந்தார். அவருக்கு தாரை தப்பட்டை முழங்க தியேட்டர் நிர்வாகம் சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் வரவேற்பு அளித்தனர்.
 
இதையடுத்து நடிகர் விஜய் தியேட்டருக்குள் சென்று ரசிகர்கள் முன்னிலையில் நண்பன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் கேக் வெட்டினார். பின்னர் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு விஜய் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
 
கேள்வி:- பல்வேறு படங்களில் நடித்துள்ளீர்கள். நண்பன் படம் நடித்து முடித்த பின்பு மதுரைக்கு வந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
 
பதில்:- பல தடவை மதுரைக்கு வந்துள்ளேன். நண்பன் ரிலீசுக்கு பின்பு சந்திக்கும் ரசிகர்களை நண்பர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். திரைப்படத்தின் வெற்றியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
 
குடும்பத்தில் தாய்-தந்தை, மனைவி, மாமன், மச்சான் என எல்லோரும் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் சில விஷயங்களை சொல்ல முடியாது. ஆனால் நண்பர்களிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். யாரும் இல்லாமல் இருந்து விடலாம், நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. நண்பன் திரைப்படத்தில் ஒரு டயலாக்கை சொல்வேன். பிடித்த தொழிலை தேர்ந்தெடுத்து அதில் திறமையாக விடா முயற்சியுடன் ஈடுபட்டால், வெற்றி கிடைக்கும்.
 
இந்த டயலாக்கை நீங்களும் பின்பற்றி உங்கள் தொழிலில் நம்பர்-1 ஆக வரவேண்டும் என்பதே எனது விருப்பம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனது பெற்றோர் என்னை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டனர். ஆனால் பல போராட்டங்களுக்கு பிறகு நான் சினிமா துறைக்கு வந்தேன்.மதுரையில் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு அலாதியானது, மறக்க முடியாதது.
 
கேள்வி:-நண்பன் படத்தில் புது டீம் அமைத்து பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?
 
பதில்:- நன்றாகவே இருந்தது. சக நடிகர்களான ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஏற்கனவே எனக்கு நெருங்கிய நண்பர்கள். இதனால் நண்பன் படத்தில் நடிப்பதில் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை.
 
கேள்வி:- இந்தியில் அமீர்கான் நடித்த கேரக்டரில் நடித்துள்ளீர்கள். அமீர்கான் நடித்த காட்சிகளை பார்த்தீர்களா?
 
பதில்- படத்தை ஒரு தடவை பார்த்தேன். படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பு அமீர்கான் நடித்த காட்சிகளை பார்த்தேன். பின்னர் என்னுடைய பாணியில் நண்பன் படத்தில் நடித்துள்ளேன்.
 
கேள்வி:- 50க்கும் மேற்பட்ட கதாநாயகிகளுடன் நடித்துள்ளீர்கள். அதில் உங்களுக்கு பிடித்த கதாநாயகி யார்?
 
பதில்:- சிம்ரன்.
 
பின்னர் நண்பன் திரைப்படத்தின் ஒரு பாடலை விஜய் பாடினார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய விசில் சத்தம் தியேட்டரை அதிர வைத்தது. அதன்பிறகு தியேட்டர் மாடிக்கு சென்ற விஜய், அங்கிருந்து ரசிகர்களை பார்த்து கைசையத்தார். விஜய்யின் வருகையையொட்டி தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி

 
 
அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா - 2', விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'துப்பாக்கி' இவ்விரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் வித்யூத் ஜாம்வால்.

ஒரே சமயத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் நாயகர்களுடன் நடித்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் வித்யூத். இது குறித்து வித்யூத் கூறியிருப்பது :

" ஒரே சமயத்தில் விஜய் மற்றும் அஜீத் இருவருடனும் நடித்து வருவது சந்தோஷமாக இருக்கிறது.

'பில்லா 2' படத்திற்காக ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினோம். ஆங்கில சினிமாவில் தான் அதுமாதிரியான சண்டைக் காட்சிகளைப் பார்க்க முடியும். இந்திய சினிமாவில் முதன் முறையாக அதுபோல் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி இருக்கிறோம். இந்த சண்டைக்காட்சியில் நான் நடித்ததில் பெருமைப்படுகிறேன்.

அஜீத் மிகவும் எளிமையான மனிதர். பல விஷயங்கள் குறித்தும் தெளிவான பார்வை உடையவர். விஜய்யுடன் நடிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் இன்னும் தன் தொழிலில் மிகச் சிரத்தையுடன் இருக்கிறார். "

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்

 
 

கோவையில் நண்பன் பட வெற்றிக்கு ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக நடிகர் விஜய் நேற்று (2.2.2012) கோவை வந்தார்.
நண்பன் படம் வசூல் சாதனை படைத்து கொண்டிருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆதரவற்ற முதியோர் இல்லத்தை சேர்ந்த 110 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.

அங்கு படிக்கும் மாணவர்கள் சுந்தரம், ரகு ஆகியோருக்கு 2 மடிக்கணினி வழங்கினார். இதை தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆதரவற்ற முதியோர் இல்லத்தை சிறப்பாக நடத்தி வரும் யுனைடெட் நிர்வாகி ராதாகிருஷ்ணனின் சேவையை பாராட்டி விருது வழங்கினார்.
அப்போது விஜய் நிருபர்களிடம் கூறியதாவது, எனது ரசிகர்கள் அனைவரும் எனக்கு நண்பர்களாக உள்ளனர். நண்பன் பட வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள்.
நண்பன் படத்தை பார்த்து திரையுலக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். என்னுடன் நடித்த ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் எனக்கு எப்போதும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.
சத்யராஜுடன் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அந்த சமயத்தில் தான் நண்பன் படத்தில் சத்யராஜுடன் நடிக்க அழைப்பு வந்தது. அவர் புதுவிதமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து ரசிகர்கள் முன் தோன்றி நன்றி தெரிவிக்க, கோவையில் உள்ள அர்ச்சனா திரையரங்கிற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் கோவை சென்ட்ரல், கனகதாரா திரையரங்கிற்கு சென்று ரசிகர் முன் தோன்றி நண்பன் பட வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இருநூறு கோடியை தொட்ட விஜயின் நண்பன்

 
 
நல்ல விமர்சனத்துடனும் நல்ல வரவேற்புடனும் வெற்றி நடை போடும் விஜயின் நண்பன் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
முதல் நாள் வசூல் 15 கோடி
இரண்டாம் நாள் வசூல் 14.5கோடி
மூன்றாம் நாள் வசூல் 14 கோடி
நான்காம் நாள் வசூல் 12.6 கோடி
ஐந்தாம் நாள் வசூல் 11.2 கோடி
ஆறாம் நாள் வசூல் 10.4 கோடி
ஏழாம் நாள் வசூல் 8.3 கோடி
எட்டாம் நாள் வசூல் 7.4 கோடி
ஒன்பதாம் நாள் வசூல் 6.4 கோடி
பத்தாம் நாள் வசூல் 5.8 கோடி
பதினோராம் நாள் வசூல் 4.8 கோடி
பன்னிரண்டாம் நாள் வசூல் 4.5 கோடி
பதின்மூன்றாம் நாள் வசூல் 4.3 கோடி
பதினான்காம் நாள் வசூல் 3.5 கோடி
பதினைந்தாம் நாள் வசூல் 3 கோடி
பதினாறாம் நாள் வசூல் 2.9 கோடி
பதினேழாம் நாள் வசூல் 2.3கோடி
பதினெட்டாம் நாள் வசூல் 2 கோடி
பத்தொன்பதாம் நாள் நாள் வசூல் 1.8 கோடி
மொத்தம் 134 கோடி
 
தெலுங்கு வசூல்

முதல் நாள் வசூல் 14.2 கோடி
இரண்டாம் நாள் வசூல் 13 கோடி
மூன்றாம் நாள் வசூல் 12.6 கோடி
நான்காம் நாள் வசூல்11.4 கோடி
ஐந்தாம் நாள் வசூல் 10 கோடி
மொத்தம் 61 கோடி
 

முதல்ல சூர்யா, இப்ப விஜய்

 
 
 
நடிகை காஜல் அகர்வால் ஒரே குஷியாக உள்ளாராம். அதற்கு காரணம் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்.
நடிகை காஜல் அகர்வால் ஆண்கள் பத்திரிக்கைக்கு அரை நிர்வாணப் போஸ் கொடுத்தார் என்று பிரச்சனை வந்தபோதிலும் அவர் காட்டில் ஜில்லென்று என்று மழைக் கொட்டிக் கொண்டு தான் இருக்கிறது. தெலுங்கில் முன்னணி நாயகர்களின் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இது தவிர தமிழில் சூர்யாவுடன் மாற்றான் படத்தில் ஒப்பந்தமாகி ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.
ஏற்கனவே தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யாவுடன் நடித்த பெருமிதத்தில் இருந்த காஜல் அடுத்து நம்ம இளைய தளபதி விஜயுடன் துப்பாக்கி படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். அப்புறம் அவர் குஷியாக இருக்க மாட்டாரா என்ன. மாற்றான் ஷூட்டிங் முடிந்த கையோடு விஜயுடன் நடிக்க சென்றுவிட்டார் காஜல்.
ஏய், பார்த்தியா முதலில் சூர்யாவுடன் நடித்தேன். அந்த ஷூட்டிங் முடிந்த கையோடு தற்போது கோலிவுட்டின் இன்னொரு முன்னணி ஹீரோவான விஜய்யுடன் நடிக்கிறேன். இதெல்லாம் நான் செய்த பாக்கியம் தான் என்று தனது தோழிகளிடம் சொல்லி, சொல்லி பூரிக்கிறாராம்.
பத்திரிக்கை பிரச்சனைக்குப் பிறகு காஜலின் மார்க்கெட் சரியும் என்று நினைத்தவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. அது இப்போதைக்கு சரியாது என்றுதான் தெரிகிறது.

வேலாயுதம் நூறாவது நாள் வசூல் (Official)

 
 
விஜயின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வேலாயுதம் . திபாவளிக்கு வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனம் மற்றும் மக்களின் வரவேற்புடன் நூறாவது நாளை கொண்டாடியது. இப்பொழுதும் சென்னையில் இப்படம் பத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் உலக வெளியீட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. இப்படத்தின் வசூல் குறித்து ஐங்கரன் இனையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது இப்படத்தின் பட்ஜெட் 45 கோடி. இப்படம் 120 கோடியை சம்பாதித்துள்ளது என சொல்லப்பட்டுள்ளது. விஜய் ஹன்சிகா ஜெனிலியா சந்தானம் சாயா சிண்டே பாண்டியராஜன் சரண்யா மற்றும் பலர் நடிக்க ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் அன்டனி இசையில் ப்ரியனின் படப்பிடிப்பில் இப்படம் வெளிவந்தது.

துப்பாக்கி'யில் சத்யன்

 
 
 
விஜய் - சத்யன் இருவரும் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான படம் 'நண்பன்'. சத்யன் நடிப்பு இப்படத்தில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் - சத்யமன் இருவரும் மீண்டும் 'துப்பாக்கி' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.

'நண்பன்' படப்பிடிப்பில் இவரது நடிப்பை பார்த்தவர்கள் 'துப்பாக்கி' படத்திற்கு இவரை முருகதாஸிடன் சிபாரிசு செய்ய, முருகதாஸ் உடனே அவரை 'துப்பாக்கி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தாராம்.

'நண்பன்' படத்தில் இவரது நடிப்பை ரசித்த ஏ.ஆர்.முருகதாஸ், சத்யனை பாராட்டியதோடு தன் படத்தில் அவரது கதாபாத்திரத்தை அதிகப்படுத்தியிருக்கிறாராம். இப்படத்தில் விஜய்யின் நண்பனாக நடிக்கிறார் சத்யன்.

'நண்பன்' படத்தினைப் போலவே 'துப்பாக்கி' படத்திலும் தனது நடிப்பிற்கு வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சத்யன்.

துப்பாக்கி பிந்துமா?

 
 

துப்பாக்கி திரைப்படத்திற்கு முன்பு குறும்படம் ஒன்றினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார்.
கொலிவுட்டில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு பெப்சிக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் துப்பாக்கி படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் விஜய் நண்பன் திரைப்படத்தினை விளம்பரப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளுக்கும் சென்று வருகிறார்.
இந்நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு குறும்படத்தினை இயக்க முடிவு செய்துள்ளார்.
தன் வீட்டிற்கு வெளியே ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்ததை கேட்ட முருகதாஸ், காதலர்களை மையமாக வைத்து ஒரு குறும்படம் இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
அந்த குறும்படத்திற்காக பள்ளியில் படிக்கும் மாணவன்-மாணவியை முருகதாஸ் தேடி வருகிறார்.
குறும்படத்திற்கு ஏற்றவாறு நடிகர்கள் கிடைத்துவிட்டால் 10 நிமிட குறும்படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

Popular Posts

Popular Posts