விஜய் நடிக்க, முருகதாஸ் இயக்கும் 'துப்பாக்கி'யின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது. காட்சிப்படி கும்பல் நிறைந்த தெருவில் விஜய் செல்வது போல எடுக்க வேண்டியிருந்ததாம். படத்தின் முக்கியமான காட்சி அது என்பதால், பொதுமக்களுக்குத் தெரியாமல் அக்காட்சியை கும்பல் இருக்கும் சாலையில் படம்பிடிக்க திட்டமிட்டிருந்தார்கள்.
பொதுமக்கள் விஜய் படப்பிடிப்பு நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் முன், அவசரமாக எடுக்க வேண்டிய காட்சி என்பதால், படக்குழுவினர் தயாராக, விஜய் சட்டென்று தானே கேமராவைக் கையாண்டு அக்காட்சியை படம் பிடித்துள்ளார்.
விஜய் எடுத்த படப்பதிவைப் பார்த்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அந்த காட்சியை விஜய் மிக அழகாக எடுத்துள்ளதாக பாராட்டியிருக்கிறார்.
'கொசுறு' கபாலி : " சீக்கிரமே, விஜய நடிக்க, சந்தோஷ் சிவன் டைரக்ட் பண்ணப் போறாரு.. படத்துக்கு பேர் இன்னும் முடிவு பண்ணலை! "