Saturday, January 14, 2012

புயல் பாதித்த மக்களுக்கு மேலும் உதவிகள் - விஜய் அறிவிப்பு

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் உதவிகள் செய்யப் போவதாக நடிகர்
விஜய் தெரிவித்தார்.
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுவை மக்களுக்கு இன்று நிவாரண
உதவிகள் வழங்கப்பட்டது. புதுவை சுப்பையா சாலையில் உள்ள குபேர் திருமண
மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் பகல் 11.45 மணியளவில் புதுவைக்கு
வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். விஜய்யை
பார்த்ததும் அவர்கள் ஆரவாரமாக கோஷமிட்டனர். அவர்களை பார்த்து கையசைத்து
மகிழ்ச்சி தெரிவித்த விஜய் விழா மேடைக்கு வந்தார்.
பின்னர் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அகில இந்திய விஜய்
ரசிகர் மன்ற தலைவரும் , புதுவை முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஸ்சிஆனந்த்
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச அரிசி , ஆடைகள் , போர்வை , பாய் ,
பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார் நடிகர் விஜய். அப்போது
அவர் பேசுகையில் , " இந்த நிகழ்ச்சியை முன்கூட்டியே நடத்தி பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவிவழங்குவதாக இருந்தது. ஆனால் சூட்டிங் காரணமாக என்னால்
முன்கூட்டி வரமுடியவில்லை.
நாங்கள் இப்போது அளித்துள்ள உதவி சிறிய அளவிலானது தான். இன்னும் இதுபோன்ற
உதவிகளை செய்வோம். அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கிறேன் ," என்றார்.
முன்னதாக விஜய் புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட
இடங்களைசுற்றிப்பார்த்து அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
விரைவில் கடலூர் மக்களையும் சந்தித்து உதவி வழங்குவதாக அவர் தெரிவி்த்தார்.

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு - ஜெ ஆட்சியில் வரிவிலக்கு பெற்ற முதல்படம்!

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளது அரசு. ஜெயலலிதா
ஆட்சியில் வரிவிலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் என்பது
குறிப்பிடத்தக்கது.
தமிழில் தலைப்பு வைத்தாலே போதும், வரி விலக்கு உண்டு என்று முன்பு
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் தரமற்ற குப்பைப்
படங்களும் தமிழில் தலைப்பு வைத்ததற்காக வரி விலக்கு பெற்றன.
For free News videos
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது...
அனைவரும் பார்க்கத்தக்க யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், தரமான படமாக
இருக்க வேண்டும். அப்போதுதான் வரிவிலக்கு என நிபந்தனைகள் விதித்தது.
வரிவிலக்கு பெறத் தகுதியான படங்களை தேர்வு செய்ய 22 பேர் கொண்ட
குழுவையும் அமைத்தது அரசு. இதில் இயக்குநர்கள்,நடிகர்கள்,
தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு பார்த்து பரிந்துரைக்கும் படத்துக்கே வரிவிலக்கு கிடைக்கும்.
வரிவிலக்குக்கு படங்களை அனுப்ப ரூ 10000 கட்டணம் உண்டு.
இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விஜய் நடித்துள்ள நண்பன்
படம் இருப்பதால் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.ஷங்கர்
இயக்கத்தில்,விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடிக்க பொங்கலுக்கு
வெளியாகியுள்ள இந்தப் படத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு
கிடைத்துள்ளது. இந்தநிலையில் வரிவிலக்கு அறிவித்துள்ளது வசூலை மேலும்
அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா பதவிக்கு வந்த இந்த 7 மாதங்களில் வரி விலக்கு பெற்றுள்ள முதல்
படம் நண்பன் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: நண்பன் , nanban

Popular Posts

Popular Posts