Friday, February 10, 2012

மனநலம் குன்றிய மாணவர்களுடன் நாயகன் விஜய்

 
 
கதைக்களம் தரமாக அமைந்தால் இரண்டு நாயகர்களுடன் இணைந்து நடிப்பதாக நாயகன் விஜய் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் நாயகன் விஜய் பயணித்துவருகிறார்.
தமிழ்நாட்டில் நண்பன் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை விஜய் தந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் மதுரையில் நண்பன் திரையிடப்பட்டுள்ள தங்கரீகல் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் நண்பன் வெற்றியை நாயகன் விஜய் கொண்டாடினார்.
இதையடுத்து மதுரையில் மனநலம் குன்றிய மாணவர்கள் மத்தியிலும் நாயகன் விஜய் உரையாடி, அவர்களுக்கும் இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.
அப்போது நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்,
நண்பன் திரைப்படத்தை போல இரண்டு, மூன்று கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிப்பீர்களா?
விஜய்: ஒரு திரைப்படத்திற்கு கதை தான் நாயகன். நாங்கள் இரண்டாம் பட்சம் தான். எனவே கதை திருப்திகரமாக இருந்தால் நடிப்பேன்.
நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?
விஜய்: பிரண்ட்ஸ் திரைப்படம் போல ஒரு கதை அமைந்தால் இணைந்து நடிப்பேன்.
தற்போது நீங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படம்?
விஜய்: துப்பாக்கி என்று பதிலளித்தார்

விஜய்யின் நண்பன் சுற்றுப்பயணம்

 
 
கொலிவுட்டில் நண்பன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நாயகன் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள மதுரைக்கு இளையதளபதி விஜய் வந்தார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாயகன் விஜய் பதில் அளித்தார்.
கேள்வி: பல்வேறு படங்களில் நடித்துள்ளீர்கள். நண்பன் படம் நடித்து முடித்த பின்பு மதுரைக்கு வந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
பதில்: பல தடவை மதுரைக்கு வந்துள்ளேன். நண்பன் ரிலீசுக்கு பின்பு சந்திக்கும் ரசிகர்களை நண்பர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். திரைப்படத்தின் வெற்றியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
குடும்பத்தில் தாய்-தந்தை, மனைவி, மாமன், மச்சான் என எல்லோரும் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் சில விடயங்களை சொல்ல முடியாது.
ஆனால் நண்பர்களிடம் எல்லா விடயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். யாரும் இல்லாமல் இருந்து விடலாம், நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. நண்பன் திரைப்படத்தில் ஒரு டயலாக்கை சொல்வேன். பிடித்த தொழிலை தேர்ந்தெடுத்து அதில் திறமையாக விடா முயற்சியுடன் ஈடுபட்டால், வெற்றி கிடைக்கும்.
இந்த டயலாக்கை நீங்களும் பின்பற்றி உங்கள் தொழிலில் நம்பர்-1 ஆக வரவேண்டும் என்பதே எனது விருப்பம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனது பெற்றோர் என்னை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டனர். ஆனால் பல போராட்டங்களுக்கு பிறகு நான் சினிமா துறைக்கு வந்தேன்.மதுரையில் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு அலாதியானது, மறக்க முடியாதது.
கேள்வி: நண்பன் படத்தில் புது டீம் அமைத்து பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?
பதில்: நன்றாகவே இருந்தது. சக நடிகர்களான ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஏற்கனவே எனக்கு நெருங்கிய நண்பர்கள். இதனால் நண்பன் படத்தில் நடிப்பதில் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை.
கேள்வி: இந்தியில் அமீர்கான் நடித்த கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளீர்கள். அமீர்கான் நடித்த காட்சிகளை பார்த்தீர்களா?

பதில்: படத்தை ஒரு தடவை பார்த்தேன். படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பு அமீர்கான் நடித்த காட்சிகளை பார்த்தேன். பின்னர் என்னுடைய பாணியில் நண்பன் படத்தில் நடித்துள்ளேன்.

கேள்வி: 50க்கும் மேற்பட்ட கதாநாயகிகளுடன் நடித்துள்ளீர்கள். அதில் உங்களுக்கு பிடித்த கதாநாயகி யார்? பதில்: சிம்ரன்.
பின்னர் நண்பன் திரைப்படத்தின் ஒரு பாடலை விஜய் பாடினார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய விசில் சத்தம் தியேட்டரை அதிர வைத்தது.
அதன்பிறகு தியேட்டர் மாடிக்கு சென்ற விஜய், அங்கிருந்து ரசிகர்களை பார்த்து கைசையத்தார். விஜய்யின் வருகையையொட்டி தியேட்டரில் பொலிஸ் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

Vijay Visits Coimbatore Theatre to promote Nanban

 
 

Tamil Actor Ilayathalapathy Vijay Visits Coimbatore Theater to promote Nanban. EXclusive pictures of Tamil Actor Ilayathalapathy Vijay Visits Coimbatore Theatre

Vijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore TheatreVijay Visits Coimbatore Theatre


View article...

Popular Posts

Popular Posts