Sunday, January 22, 2012

விஜய்யை அடிக்க தயங்கிய ஸ்ரீகாந்த்…!

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்துள்ள நண்பன் படம்
மூலம், நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு ஒரு பிரேக் கிடைத்திருக்கிறது என்றால்
அதுமிகையல்ல. விஜய், ஜீவா ஆகியோருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தும் நண்பன்
படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் நண்பன்
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய்யை, ஜீவாவும், ஸ்ரீகாந்தும்
அடிப்பது போன்று ஒரு காட்சி. ஆனால் இந்த காட்சியில் நடிக்க தயங்கியதாக
ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ஜீவாவும், நானும் விஜய்யை அடிப்பது
போன்று காட்சி. ஆனால் இதில் நடிக்க நான் தயங்கினேன். பிறகு விஜய்யே வந்து
தயங்காதீர்கள், இந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்
என்று உற்சாகப்படுத்தினார். அதன்பின்னர் அந்தகாட்சியில் நடித்தேன். விஜய்
‌சொன்னது போன்று பலரும் அந்தக்காட்சியை பாராட்டினார்கள்.
சூட்டிங்கில்மூவரும் நல்ல நண்பர்களாகத்தான்இருந்தோம். நண்பன் படம் மூன்று
ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் மூவருக்கும் சமமான கேரக்டர் தான். இதனால்
மூவரும் தங்களது நடிப்பை வெளிப்படுத்த முடிந்தது. அப்படி ஒரு
கேரக்டரைஅமைத்து கொடுத்த டைரக்டர் ஷங்கர் சாருக்கு நன்றி. ஷங்கர் சார்
டைரக்டர் மட்டுமல்ல, ஒரு சிறந்த நடிகரும் கூட. அவர் எப்படி நடிக்க
சொன்னாரோ, அதன்படி அப்படியே நடித்தேன் என்றார்.

விஜய்யின் 'நண்பன்' 10 நாளில் ரூ. 110 கோடி வசூல்?

விஜய் நடிப்பில் , பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டுள்ள நண்பன் படம்
வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. படம் வெளியாகி 10
நாட்கள் ஆகி விட்ட நிலையில் இதுவரை ரூ. 110 கோடியை அது
வசூலித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
படம் வெளியிடப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வரவேற்புடன்ஓடி
வருவதாகவும் , விஜய் மற்றும்மற்றவர்களின் நடிப்புக்கு மக்கள் மத்தியில்
நல்ல வரவேற்பு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
படத்தில் விஜய் உள்ளிட்ட அத்தனை பேரும் இயல்பாக நடித்துள்ளதை அனைவரும்
ரசிப்பதாலும் , வித்தியாசமான விஜய்யைப் பார்க்க ரிபீட் ஆடியன்ஸ்
எனப்படும் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை
அதிகரித்து வருவதாலும்தான் படம் பெரும் வெற்றி பெற்றிருப்பதாக
கூறுகிறார்கள்.
மேலும் வசூல் சாதனைகளை இது படைக்க ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
பன்ச் டயலாக்குகளில் மட்டுமல்லாமல் பாந்தமான நடிப்பாலும் தன்னால் அசத்த
முடியும் என்பதை விஜய் நிரூபித்து விட்டார் என்பதுதான் இந்தப் படத்தின்
டாப் ஹைலைட்டாக அமைந்துள்ளது.
விஜய் மட்டுமல்லாமல் ஜீவா , ஸ்ரீகாந்தக் , சத்யன் , சத்யராஜ் என மற்ற
கலைஞர்களின் நடிப்புக்கும் பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
இதுவரை விஜய் நடித்து வெளியான படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்ற பேச்சும்
படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைந்து விட்டது என்கிறார்கள்
திரையுலகினர்.
விஜய் பட வசூல் குறித்து இதுவரைபடத் தயாரிப்புத் தரப்பில்
அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும் பத்து நாட்களில் ரூ.
110 கோடி வசூல் என்ற பேச்சே அந்தப் படத்திற்கு இன்னொரு விளம்பரமாக
அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Popular Posts

Popular Posts