துப்பாக்கி' படத்திற்காக தனது உடலமைப்பு எல்லாம் மாற்றி ஒரு தோட்டாவாகவே நடித்து வருகிறாராம் விஜய்.
மும்பையில் எவ்வித தடங்கலும் இல்லாமல் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்திற்காக பாங்காக்கில் விஜய், காஜல் அகர்வால் பங்கு பெறும் ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள். இப்பாடலை பாடியிருப்பவர் விஜய்.
இளைஞர்களின் ரசனையை மனதில் கொண்டு இப்பாடலுக்கு டியூன் போட்டிருக்கிறாராம் ஹாரிஸ். இரண்டு வாரங்கள் முன்னர் சென்னையில் இப்படத்தின் பாடலை தயார் செய்தவர்கள், தற்போது அதை பாங்காக்கில் படமாக்கி வருகிறார்கள்.
விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலும், அதே நேரத்தில் தனது பாணியை கைவிடாமல் 'துப்பாக்கி'யை தயார் செய்து வருகிறாராம் முருகதாஸ்.
கொசுறு 'கபாலி' : " தீபாவளி ரிலீசுக்கு தயாராகுது 'துப்பாக்கி'. அன்னிக்கு தான் 'கோச்சடையான்' படமும் ரிலீஸ்! நான் இதுக்கு போவேனா.. அதுக்கு போவேனா?"