Wednesday, February 15, 2012

வேலாயுதம் – விஜய் சிறந்த நடிகர்

 
 
 
எடிசன் பெய‌ரில் வருடம்தோறும் திரைத்துறையினருக்கு விருது வழங்கி வருகிறார்கள். இது ஐந்தாவது வருடம். இந்த வருடம் சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறவர், விஜய்.
ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்த வேலாயுதம் படத்துக்காக விஜய் இந்த விருதை பெற்றுள்ளார். நண்பன் வெற்றியில் மகிழ்ந்துப் போயிருப்பவருக்கு இது கூடுதல் மகிழ்ச்சி.
வேலாயுதம் முழுமையான வெற்றியை பெறவில்லை, அது ஒரு கமர்ஷியல் சினிமா, விஜய் வழக்கம் போல பன்ச் வசனம் பேசி நடித்திருக்கிறார், மற்றபடி சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தவில்லை என்று புரணி பேசியவர்களின் பிட‌ரியில் இந்த விருது ஒரு போடு போட்டிருக்கிறது.
சந்தோஷம்தானே தளபதியின் கோடானு கோடி ரசிகர்களே?

விஜய்க்கு வில்லனா?

 
 
'நண்பன்' படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

'துப்பாக்கி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜெயராம்.

ஜெயராம் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் 'பொன்னர் சங்கர்'. மலையாள திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் ஜெயராம் தமிழில் நல்ல வேடங்கள் வந்தால் மட்டுமே நடித்து வந்தார்.

'துப்பாக்கி' படத்தில் ஜெயராமிற்கு விஜய்க்கு இணையான வேடம் கொடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் சங்கம் - பெப்ஸி பிரச்னை முடிந்தவுடன் நடைபெற இருக்கும் 'துப்பாக்கி' படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ஜெயராம்.

சரோஜா, தாம் தூம் படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயராம். இப்படத்தில் அவர் வில்லனா இல்லையா என்பது சஸ்பென்ஸாம் !

விஜய்யின் துப்பாக்கியில் ஜெய்?

 


கடல் மீனை பிடிச்சு வாய்காலில் விட்ட மாதிரி, திசை தப்பி திண்டாடிக் கொண்டிருக்கிறார் ஜெய். சுப்ரமணியபுரம் என்ற ஒரே ஒரு ஹிட்டுக்கு பின் தாறு மாறாக தாண்டவம் ஆடிய ஜெய்யை அப்படியே ஓரம் கட்டி ஆசுவாசப்பட்டுக் கொண்டது கோடம்பாக்கம். அவரும் நிலைமையை புரிந்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டதுடன், ஆகாயத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தார்.

ஏகப்பட்ட இடைவெளிக்கு பின் எங்கேயும் எப்போதும் வந்தது. மறுபடியும் 'தாண்டவக்கோனே' ஆகிவிட்டார் ஜெய். போன் வந்தால் எடுப்பதில்லை. நேரில் கண்டால் சிரிப்பதில்லை என்று ஒரே கம்ப்ளைண்ட் உதவி இயக்குனர்கள் மத்தியிலும், தயாரிப்பாளர்கள் மத்தியிலும். சம்பளத்தையும் 'ஒன் சி' கேட்கலாமே என்று ஏற்றிவிட்டார்களாம் உடனிருந்த நண்பர்கள். அதற்கேற்றார் போல ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார் ஜெய்.

இந்த நேரத்தில்தான் இன்னொரு சங்கடம் அவருக்கு. ஜெய்யை பொருத்தவரை மீட்பர், மேய்ப்பர் எல்லாமே முருகதாஸ்தான். ஏனென்றால் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் இவருக்கு வாய்ப்பு தந்ததே முருகதாஸ்தான். எனவே அவர் இயக்கி வரும் துப்பாக்கி படத்தில் 'ஒரு கேரக்டர் இருக்கு. நடிக்கணும்' என்றதும் கேள்வியே கேட்காமல் ஒப்புக் கொண்டார்.

விஜய் என்ற பெரிய ஹீரோ நடிக்கும் படத்தில் ஜெய் என்ற சிறிய ஹீரோவுக்கு என்ன வேலை இருக்கும்? பதற்றத்தை எப்போதும் முகத்தில் தேக்கி வைத்தபடியே வேலை பார்க்கிறாராம் ஜெய். படப்பிடிப்பிலும் அவ்வப்போது எரிந்து விழுவதாக தகவல்.

துப்பாக்கியை பொருத்தவரை ஜெய்க்கு கெஸ்ட் ரோல்தான். ரசிகர்கள் யாரும் அஞ்சத் தேவையில்லை என்கிறார்கள் அவரது தரப்பில்.

விஜய்யின் துப்பாக்கியில் ஜெயராம்!!

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராமும் சேர்ந்து இருக்கிறார். நண்பன் படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் புதிய படம் "துப்பாக்கி". இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்து வந்தது. சினிமா தொழிலாளர் சம்பள பிரச்னை தொடர்பாக தற்காலிகமாக துப்பாக்கி படத்தின் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஒரு முக்கிய ‌ரோலில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து ஜெயராம் கூறுகையில், இந்தபடத்தில் என்னுடைய கேரக்டர் பற்றி டைரக்டர் விளக்கி கூறியதும், ரொம்பவே பிடித்து போய்விட்டது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். சூட்டிங் எப்போது ஆரம்பிக்கும் என்ற ஆவலில் இருக்கிறேன். படத்தில் என்னுடைய ரோல் என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாய் சொல்ல முடியும் படத்தில் என்னுடைய கேரக்டர் ரொம்பவே வெயிட்டானது என்றார். மேலும் தான் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், மலையாளம் சினிமா போலவே, நிறைய தமிழ் படங்களும் என்னை உச்சத்திற்கு கொண்டு சென்றது. ஆகையால் தொடர்ந்து தமிழ் படங்களில் நல்ல ‌நல்ல கேரக்டரில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

இதனிடையே துப்பாக்கியில், ஜெயராம் வில்லன் கேரக்டர் ஏற்க கூடும் என்று பரவலாக பேசப்படுகிறது. ஏற்கனவே ஜெயராம், "சரோஜா", "தாம் தூம்" போன்ற படங்களில் வில்லனாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினி விருது!!

 

சூப்பர் ஸ்டார் ரஜினி பெயரில் இந்த ஆண்டு விஜய்க்கு விருது வழங்கியுள்ளனர்.எடிசன் விருது வழங்கும் விழா கடந்த ஞாயிறன்று சென்னையில் நடந்தது. விழாவில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ், நடிகர்கள் ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ், ஆர்கே, பேபி சாரா, கோவை சரளா, மயக்கம் என்ன நாயகி ரிச்சா கங்கோபாத்யாயா, இனியா, லட்சுமிராய், லட்சுமி ராமகிருஷ்ணன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிறந்த பாடலாசிரியர் விருது நா முத்துகுமாருக்கும், இசையமைப்பாளர் விருது ஹாரிஸ் ஜெயராஜுக்கும் வழங்கப்பட்டது.

இந்த விருது விழாவில், விஜய் தன் படங்களில் ரஜினி பற்றிப் பேசி ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கிய காட்சிகளைக் காட்டினர். பின்னர் ரஜினி விருதினை அவருக்கு வழங்குவதாக அறிவித்தனர்.விருதினைப் பெற்றுக் கொண்ட விஜய், ரசிகர்களை ஆஹா ஓஹோவெனப் பாராட்டினார். நண்பன் படத்திலிருந்து ஒரு பாட்டுப் பாடினார்.எல்லாம் முடிந்ததும், 'சூப்பர் ஸ்டார் ரஜினி அவார்டு வாங்கியிருக்கீங்க… அவரைப் பற்றி பேசுங்கள்' என நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிட்டி பாபு கேட்க (மகா சொதப்பல்), விஜய் ஒன்றுமே பேசவில்லை. மீண்டும் மீண்டும் பேசச் சொன்னபோது, சற்று நேரம் மவுனமாக நின்றுவிட்டு, "வரேன்!" என்று கூறிச் சென்றார்.

விஜய்யுடன் காதலா? : அமலாபால் பரபரப்பு பேட்டி

 

இயக்குனர் விஜய்யுடன் காதல் இல்லை. அவர் எனக்கு நெருக்கமான நண்பர் என்றார் அமலா பால். இது பற்றி அவர் கூறியதாவது: மைனாவில் கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணி அணிந்து நடித்த நீங்கள் 'வேட்டை படத்தில் கவர்ச்சியாக நடித்தது ஏன்? என்கிறார்கள்.

எனது வேடத்தை தேர்வு செய்தபிறகு அதற்கு ஏற்றவகையில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஓவர் கிளாமராக நடிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. என்னுடைய மனதுக்கு பிடித்த வேடங்களை மட்டுமே ஏற்கிறேன். எனது கவர்ச்சியை பணம் தீர்மானிப்பதில்லை. வேடம்தான் தீர்மானிக்கிறது.

கமர்ஷியல் வெற்றியும் முக்கியம் என்பதால் கவர்ச்சியாக நடிக்க வேண்டி உள்ளது. 'ஆர்யாவுடன் லவ்வா? என்றார்கள். இப்போது இயக்குனர் விஜய்யுடன் இணைத்து பேசுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. திரையுலகில் எனது நெருங்கிய நண்பர் விஜய். தனுஷுடன் '3 படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். கிளாமராகத்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் வரும்போது நிச்சயம் ஏற்று நடிப்பேன்.

Popular Posts

Popular Posts