"நண்பன் படத்தில் , இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனரின் புகழை
களங்கப்படுத்தி , அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ள , இயக்குனர்
ஷங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ; படத்தை தடை செய்ய வேண்டும்
எனக்கோரி , அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயசீலன் , காவல் துறை கமிஷனரிடம்
புகார் மனு அளித்துள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது:ஷங்கர் இயக்கிய , "
நண்பன் படத்தில் , மோசடி கதாபாத்திரத்திற்கு , " பாரிவேந்தர் என்று பெயர்
சூட்டியிருக்கிறார்.
இன்னொரு பெண் கதாபாத்திரம் மதுபோதையில் , " பாரிவேந்தராவது ,
பூரிவேந்தராவது என்றும் ; மற்றும் ஒரு இடத்தில் , " பாரி , பூரி ,
கக்கூஸ் லாரி என்றும் , வசனத்தை பயன்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் ,
பல லட்சம் மக்களால் பாரிவேந்தர் என்று அழைக்கப்படுகிற எங்கள் கட்சியின்
நிறுவனர் புகழுக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது.இதற்கு முன்பாக , அவர்
இயக்கிய , " சிவாஜிபடத்தில் , தமிழினத்தின் அடையாளமான வள்ளல் பாரியின்
மகள்களான அங்கவை , சங்கவை ஆகிய இருவரையும் , கறுப்பாக சித்தரித்து ,
தமிழ்ப் பெண்கள் கறுப்பானவர்கள் என்றும் , யாரும் அவர்களை உரிமையாக்கிக்
கொள் ளலாம் என்றும் சித்தரித்திருக்கிறார்.
வேறு ஒரு படத்திலும் , பல லட்சம் கட்சி மற்றும் பார்க்கவ குல
சமுதாயத்தால் போற்றப்படுகிற எங்களுடைய தலைவரின் பெயரை , குடிகாரனுக்கு
சூட்டி , அவன் , பெண்களிடம் தகாத முறையில் நடப்பது போல காட்சி அமைத்து ,
அவர் பெயரை களங்கப்படுத்தி இருக்கிறார்.இவ்வாறு , எங்கள் நிறுவனத் தலைவர்
புகழை கெடுக்கும் விதமாக இயக்குனர் ஷங்கர் , அவதூறான , தரக்குறைவான ,
சட்டத்திற்கு புறம்பானவைகளை , தவறான உள்நோக்குடன் பயன்படுத்தி , தன்
படத்திற்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்.எங்கள் நிறுவனர் , அவரை
பின்பற்றுகிற கட்சி மற்றும் சமுதாய மக்களின் மனதை புண்படுத்தி களங்கம்
கற்பித்த ," நண்பன் பட இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் மீது
வழக்குப் பதிந்து , சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ,
மனுவில் கூறப்பட்டுள்ளது.
Actor Vijay News , Ilayathalapathy Vijay - Official news Channel , Ilayathalapathy Vijay, Ilayathalapathy Vijay breaking news
Monday, January 16, 2012
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
ஷங்கர் இயக்கத்தில் விஜய் , ஜீவா , ஸ்ரீகாந்த் , சத்யராஜ் , இலியானா , சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் ' நண்பன் '....
-
Vijay fans celebrated Velayutham's success recently and since it is his 52nd film, about 52 college students pledged to donate ...
-
In the AR Murugadoss film, Vijay is playing a Mumbai dada, reports some sources in Kollywood. Though this fact has not been confirm...
-
ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்... இப்படி வரும் விஜய்யின் பஞ்ச் டயலாக்குகளை கேட்பதற்காகவே காதுகளை கூர்...
-
Img Super Singer Vijay Super Singer Vijay » » Super Singer Vijay Super Singer Vijay December 29th, 2013 | | Tags: Vijay Nope, this is not t...
-
கதைக்களம் தரமாக அமைந்தால் இரண்டு நாயகர்களுடன் இணைந்து நடிப்பதாக நாயகன் விஜய் கூறியுள்ளார். கொலிவுட்டில் ஷங்கர் இயக்கிய நண்பன் ...
-
துப்பாக்கி திரைப்படம் கை விடப்படவில்லை என்று நாயகன் விஜய் கூறியுள்ளார். கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத...
-
Gautham Vasudev Menon is doing four projects at a time�- 'Neethane En Ponvasantham', which he is simultaneously making...