Friday, January 13, 2012

விஜய் நாளை புதுவை வருகை: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குகிறார்

தானே புயலால் புதுவை பகுதி முழுவதும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த
நிலையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடிகர்
விஜய் நாளை (சனிக்கிழமை) புதுவைவருகிறார்.
புதுவை சுப்பையா சாலையில் குபேர் திருமண மண்டபம் அருகே காலை 9 மணிக்கு
நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
அரிசி , உடை , பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை வழங்குகிறார்.
நிகழ்ச்சிக்கு அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்சி ஆனந்து தலைமை
தாங்குகிறார். நிகழ்ச்சியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும்
பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி புஸ்சி ஆனந்து கேட்டுக்
கொண்டுள்ளார்.

Popular Posts

Popular Posts