Tuesday, December 6, 2011

Vijay’s Nanban’s catchy song

 

Shankar's Vijay multi-starrer Nanban will have its audio launch likely on December 15 at Chennai Trade Centre.

The producers of the film Gemini Film Circuit is planning it as a big ticket event.

The grapevine is abuzz that Aamir Khan and Raju Hirani the director of 3 Idiots will attend the function.

Meanwhile the buzz around Nanban music is getting big. Already all fans of Vijay are humming "En Friend Pola Yaru..", the catch song from the film.

The song has been composed by Harris Jayaraj as a teaser and Shankar will be using it as a montage song in the film. The friendship song is said to be one of the highlights of the album.

Nanban has Vijay, Jiiva, Srikanth, Ileana and Sathyaraj in the lead. Vijay is playing the role made memorable by Aamir Khan. The film is scheduled to release for Pongal 2012.



உறுதிப்படுத்தபட்ட நண்பன் பாடல் வெளியீட்டு திகதியும் இடமும்

 
 
 
நண்பன் பாடல் வெளியீடு திகதியை ஜெமினி பிலிம் நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 ம் திகதி நேரு ஸ்டேடியம் சென்னையில் இடம்பெற உள்ளது.
விஜய் மற்றும் சங்கர் இணையும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இப்படத்தின் பாடல் 14 ம் திகதியும் படம் பொங்கல் வெளியீடாகவும் வெளிவர உள்ளது.
இப்படம் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். இதில் விஜய் ஜீவா சிறீகாந்த் இலியானா சத்தியராஜ் சத்தியன் லோரன்ஸ் ஜே. சூர்யா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் சிறந்த இசையை வழங்கியுள்ளார். பின்னணி இசை பெரிதும் பேசப்படும் எனவும் கூறியுள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் மிகவும் நன்றாக வந்ததுள்ளது என படக்குழுவினர் கூறியுள்ளனர்.பாடல்களை 14ம் திகதி முதல் கேட்கலாம்.


விஜய் - அஜீத்தை இணைத்து படம் : செல்வராகவன் பேட்டி

 
 
விஜய், அஜீத்தை இணைத்து படம் இயக்க கதை தயாராக உள்ளது என்று இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார். இதுபற்றி செல்வராகவன் கூறியதாவது: 'மயக்கம் என்ன' படம் பார்த்து பலர் பாராட்டினார்கள். என்னைப் பொருத்தவரை வழக்கமான மசாலா படங்கள் எடுப்பதைவிட வித்தியாசமான கதை களங்களுடன் படம் இயக்கவே விரும்புகிறேன்.

யுவன் சங்கர் ராஜாவுடன் எனக்கு எந்த சண்டையும் இல்லை. விரைவில் அவருடன் இணைந்து படம் தருவேன். விஜய், அஜீத்தை எப்போது இயக்கப்போகிறீர்கள் என்கிறார்கள். இருவரையும் இணைத்து ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன். அந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது. எப்போது அது நிறைவேறும் என்று தெரியவில்லை. எனது அடுத்த படம் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் 'இரண்டாம் உலகம்'. இதுதவிர திகில் படத்துக்காக 2 ஸ்கிரிப்ட் உள்ளது. 'ஆயிரத்தில் ஒருவன்' பார்ட் 2 அடுத்த ஆண்டு தொடங்க உள்ளேன். இவ்வாறு செல்வராகவன் கூறினார்.

மிகப்பெரிய வெற்றியடைந்த நண்பன் முன்னோட்டம் (வீடியோ)

 
 
 
விஜயின் நண்பன் படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இப்படத்தை சங்கர் இயக்குகிறார். இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை ஜெமின பிலிம்ஸ் வெளியிட்டது. ஜெமினி பிலிம்ஸ் வெளியிட்ட மயக்கம் என்ன படம் வெளியிட்ட திரையரங்குகளில் எல்லாம் நண்பன் பட முன்னோட்ட வீடியோ ஒளிபரப்பபட்டு வருகிறது. ரசிகர்களுக்கு பட முன்னோட்டம் படம் பார்க்கும் ஆவலை மேலும் மேலும் தூண்டியுள்ளது.
இப்பொழுது ஒரு படத்தின் வீடியோ வெளிவந்தால் அது யூ.டியுபில் பெரும் ஹிட்ஸ் கணக்கிடப்படுகின்றன. அதில் நண்பன் முன்னோட்ட வீடியோ முன்னிலையில் உள்ளது. அதிகளவான ரசிகர்கள் பார்வை இட்டுள்ளனர்.
இப்படத்தில் வரும் அனைவரும் மிகவும் வித்தியாசமாக கலக்கியுள்ளனர். சங்கர் கிந்தி 3 இடியட்சை விட சிறப்பாக இயக்கியுள்ளார் என அவ் முன்னோட்டமே காட்டுகிறது.

 
 
 

துப்பாக்கி படப்பிடிப்பு ஆரம்பம்

 
 
 
விஜய் நடிப்பில் அடுத்து வர உள்ள படம் துப்பாக்கி. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வருகிற வாரம் தொடங்க உள்ளது. திங்கள் கிழமை பத்திரிகைகளில் இப்படத்தின் விளம்பரத்தை வெளியிட உள்ளனர்.
தயாரிப்பாளர் தாணு இது பற்றி அளித்த பெட்டியில் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கம் படத்தை எனது நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு துப்பாக்கி என்ற தலைப்பை வைத்துள்ளோம். இத்தலைப்பை பதிவு செய்து விட்டோம். அடுத்த வாரம் இப்படத்தின் ஏனைய விபரங்களை வெளியிட உள்ளோம்.
முருகதாஸ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி மும்பைக்கு நகர உள்ளது. இசை ஹரிஸ் ஜெயராஜ் . சந்தோசிவன் கமராமேன்.
தற்பொழுது இப்படத்தின் விளம்பர போட்டோவை தயாரித்து வருகின்றனர். இப்படத்தை 5 ம் திகதி பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த உள்ளோம் என சந்தோசிவன் கூறினார்.
இப்படம் வெற்றியடைய எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் வாழ்த்துக்களை இங்கு பதியுங்கள்.

நண்பனுக்காக வரும் அமீர்கான்

 
 
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் பொங்கல் 2012ல் வெளியாக இருக்கும் படம் ' நண்பன் '. இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ' 3 இடியட்ஸ் ' படத்தின் ரீமேக் ' நண்பன்' .

ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். இலியானா நாயகியாக நடிக்க ஜெமினி நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 14ம் தேதி நேரு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார்கள்.

3 இடியட்ஸ் படத்தின் நாயகன் அமீர்கான் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ளக்கூடும் என்கிறார்கள்.

டிசம்பர் 14ம் தேதி இசை வெளியான உடன் இப்படத்தினை தொடர்ந்து விளம்பரப்படுத்தி ஜனவரி 14ல் உலகம் முழுவதும் வெளியிட இருக்கிறார்கள்.

துப்பாக்கியில் விஜயின் கரெக்டர் என்ன?

 
 
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் எப்போது துவங்குகிறது, யார் தயாரிப்பாளர் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் நிலவி வந்தன.

தயாரிப்பாளர் தாணு தான் என்று முதலில் முடிவானது. காஜல் அகர்வால் தான் நாயகி என்று கூறி வந்தாலும் இதுவரை முறையான அறிவிப்பு எதுவும் வெளிவர வில்லை.

இந்நிலையில் இப்படத்திற்கு ' துப்பாக்கி ' என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள். ' போக்கிரி ' படத்தினை அடுத்து இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன். போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதால் அதற்காக ஜிம்மிற்கு சென்று தனது உடம்பை ஏற்றி கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வலம் வந்தன.

இத்தகவலை விஜய் மறுத்துள்ளார். எந்த கதாபாத்திரத்திற்காகவும் ஜிம்மிற்கு போய் உடலை முறுக்கேற்றிக் கொள்வது இல்லை. நான் எப்போது ரெகுலராக உடற்பயிற்சி செய்பவன். வெளிவந்த அந்த தகவலில் உண்மை இல்லை " என்று தெரிவித்துள்ளார்.

'துப்பாக்கி' படத்தின் முதல் பேப்பர் விளம்பரம் 5ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது தான் லேட்டஸ்ட் தகவல். 'துப்பாக்கி'க்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

விஜயின் துப்பாக்கி பட முழு விபரம்

 
 
 
வேலாயுதம் மெஹா ஹிட் படத்தை தொடர்ந்தது விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி. இப்படம் பற்றிய செய்திகளை நேற்று தந்திருந்த்தோம். இன்று முழுமையான தகவலை இன்று தருகிறோம். உத்தியோக பூர்வ தகவல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
துப்பாக்கி படம் நாளை சென்னையில் தொடங்க உள்ளது. துப்பாக்கி படத்தை இப்பட தயாரிப்பாளர் கலைபுலி தாணு உறுதி செய்தார்.
துப்பாக்கி பட விபரங்கள்
நடிகர் :- விஜய்
நடிகை :- காஜல் அகர்வால்
இயக்குனர் :- A.R.முருகதாஸ்
இசையமைப்பாளர் :- ஹரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு :- கலைபுலி தாணு
ஒளிப்பதிவு :- சந்தோஸ்சிவன்
படத்தொகுப்பு :- ஸ்ரீகர் பிரசாத் (7 தடவை தேசிய விருது பெற்றவர்)
கலை :- தோட்டாதரணி ( தேசிய விருது பெற்றவர்)
 

குழப்பத்தில் ரசிகர்கள் பதில் தான் என்ன

 
 
 
விஜய் சீமான் இயக்கத்தில் படம் நடிப்பதாக இருந்தது இதனை விஜய் போன வருடம் இறுதியில் உறுதிப்படுத்தினார். அதன் பின் விஜய் நண்பன் வேலாயுதம் என நடித்ததால் அப்பட படப்பிடிப்பு பிந்திப்போனது. விஜய் நடிக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு என உறுதி செய்யப்பட்டது. இதனை சீமானும் உறுதி செய்தார். ஆனால் இப்படம் பற்றிய உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளிவரத நிலையில் இப்படத்தினை தயாரிப்பதாக இருந்த தாணு விஜய் முருகதாஸ் இணையும் படத்தை தயாரிக்க உள்ளார். இதனை தாணு உறுதிப்படுத்தினார். முதலில் இப்படத்தை விஜயின் தந்தை மற்றும் ஜெமினி பிலிம் தயாரிப்பதாக இருந்தது. பின் தாணுவிடம் படம் கை மாறியது. விஜய் தாணுவின் படத்தில் நடிப்பதாக இருந்ததால் தான் துப்பாக்கி பட தயாரிப்பை தாணுவுக்கு வழங்கினார் என கூறப்படுகிறது. அப்பொழுது விஜய் சீமான் இணைய இருந்த படம் என்ன ஆச்சு என்பதை விஜய் அல்லது தாணு தான் சொல்ல வேண்டும்.

நான் சினிமா உலகில் நடிக்கும் முக்கியமான திரைப்படம் - காஜல் அகர்வால்

 
 

இளைய தளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கித் திரைப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.

இத்திரைப்படத்தைப்பற்றி நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது, நான் சினிமா உலகில் நடிக்கும் முக்கியமான திரைப்படம் தான் இந்த துப்பாக்கி.
முதல் முறையாக இளைய தளபதி விஜய், இயக்குனர் முருகதாஸ் இருவருடனும் நான் இணைந்து பணியாற்றுகிறேன். துப்பாக்கி படத்தில் இயல்பான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன்.
இதுவரையில் முருகதாஸ் திரைப்படங்களில் உள்ள கதாநாயகி கதாப்பாத்திரங்களை விட துப்பாக்கி படத்தில் வரும் கதாநாயகி கதாப்பாத்திரம் பலமானது.
இயக்குனர் முருகதாஸ்-விஜய் கூட்டணியில் கதாநாயகியாக நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ரசிகர்களை ஏமாற்றிய நண்பன்

 
 

அமீர்கான், மாதவன் நடித்து இந்தியில் ஹிட்டான "3 இடியட்ஸ்" படம் தமிழில் "நண்பன்" என்ற பெயரில் "ரீமேக்" ஆகிறது. விஜய், சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா ஆகியோர் நடிக்கின்றனர். ஷங்கர் இயக்குகிறார். படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடக்கிறது. பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை வருகிற 15-ந் தேதி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்த உள்ளனர். நடிகர், நடிகைகளின் நடனம், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த விழாவுக்கு அமீர்கானை அழைக்க முடிவெடுத்துள்ளனர். அவரை அழைத்து வரும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே சல்மான்கான், பெப்சி விஜயன் இயக்கிய மார்க்கண்டேயன் படவிழாவில் பங்கேற்க சென்னை வந்தார். ஷாருக்கான் தனது "ரா ஒன்" பட ரிலீசையொட்டி சென்னைக்கு வருகை தந்ததுடன் ரஜினியையும சந்தித்து விட்டு சென்றார். இவர்களை தொடர்ந்து அமீர்கானும் வருகிறார்.
 

விஜயின் இரட்டை சவாரி

 
 
 
விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் நண்பன் அதை தொடர்ந்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி மற்றும் கெளதம் மேனன் இயக்கத்தில் யோகன் அத்தியாயம் 1 ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். இவை இரண்டும் வித்தியாசமான படங்கள் எனக்கூறியுள்ளர் விஜய்.
இவ் இரண்டு படங்களும் குற்றவாளிகள் பற்றிய கதையாக இருக்கும் எனக் கூறுகின்றனர் அனால் அது உண்மையாக இருக்குமோ இல்லையோ எனத்தெரியவில்லை. யோகன் படம் ஒரு சர்வதேச துப்பறியும் படம் . ஆனால் துப்பாக்கி இந்தியாவில் நடக்கும் கதை. அதில் விஜய் என்னவாக வர உள்ளார் என்பது தெரியவில்லை. இப்படம் இரண்டும் மிகப்பெரிய வெற்றியடையும் என்பது உறுதி. இரண்டும் துப்பாக்கிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கி வரும் படம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மிக வேகமான திரைகதை படத்திற்கு பெரிய பிளசாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Popular Posts

Popular Posts