ஷோபா சந்திரசேகரனின் அம்மாவும் விஜய்யின் பாட்டியுமான லலிதா நீலகண்டன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.
லலிதா நீலகண்டனின் பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தி, பல படங்களைத் தயாரித்துள்ளனர். அவற்றை பெரும்பாலும் லலிதாவின் மருமகன் எஸ்ஏ சந்திரசேகரனே இயக்கினார்.
லலிதா நீலகண்டனுக்கு இரண்டு மகன்கள். பாடகரும் நடிகருமான எஸ் என் சுரேந்தர் மற்றும் சுந்தர். இரண்டு மகள்கள் ஷோபா சந்திரசேகரன் மற்றும் ஷீலா. ஷோபாவின் மகன் நடிகர் விஜய். ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்த்.
பாட்டி மீது மிகுந்த பாசமாக இருந்தார் விஜய். மகள் ஷோபா- மருமகன் சந்திரசேரனுடன் வசித்து வந்த லலிதா நீலகண்டனுக்கு நேற்று நெஞ்சுவலி வந்தது. அவரை விஜயா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் இன்று காலை அவர் மரணமடைந்தார்.
அவருக்கு நுங்கம்பாக்கம் தெரஸா சர்ச்சில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. மாலையில் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. லலிதா நீலகண்டனுக்கு விஜய் ரசிகர்கள், திரையுலகினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.