Saturday, October 29, 2011

Velayudham Makes an Impressive Start

 
 
Aascar Ravichandran, Vijay and Jeyam Raja are keeping their fingers crossed as they are sure as shooting stars with 'Velayudham'. Having filmed nearly for a year, the makers had smart strategies of promoting the film not only in Tamil Nadu, but across the neighboring states as well.

Ilayathalapathy Vijay fans in Karnataka as the actor enchanted him with this fluent lines in Kannada. It is worth mentioning that the actor has huge fans following him in Kerala and the film is released nearly in more than 120 theatres.

The plans for advance bookings opened yesterday across all the theatres. Within few hours, the tickets for next 5 days were sold out and additional shows are to be screened as per the requests of fans. Sathyam multiplex has the film screened at its main theatre and most of the multiplexes have more shows.

நண்பனை பற்றி பேசும் விஜய்

 
 

நம்ம படத்தைப் பத்தி நாமளே ரொம்பப் பேசக் கூடாதுங்ணா. இந்தப் படத்துக்கு அப்புறம் பெரிய ஹீரோக்கள் பட வாய்ப்பு ராஜாவுக்கு வரும்.
பெரிய இயக்குநர்கள் இன்னும் நம்பி என்னை ஃபிக்ஸ் பண்ணுவாங்க கண்களில் தொக்கி நிற்கும் டிரேட் மார்க் புன்னகையுடன் பேட்டியை ஆரம்பிக்கிறார் விஜய்.
ஷங்கர் – விஜய் காம்பினேஷன் சந்தோஷம்… எப்படி வந்திருக்கு 'நண்பன்'?
ஷங்கர் சார் என் அப்பாகிட்ட அசிஸ்டென்டா இருந்தப்பவே பழக்கம்தான். அப்பப்போ அவர்கிட்ட பேசி இருக்கேன். ஆனா, இன்னைக்கு இருக்குற ஷங்கர் வேற. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் அவர் பிளான் பண்ற மெத்தட் சிம்ப்ளி சூப்பர் ஷங்கர் சார் படத்தில் ஈஸியா நடிச்சிடலாம். ஏன்னா, அவரே நடிச்சுக் காட்டிருவார். அவர் இன்னைக்கு இந்திய அளவில் பிரபலமான டைரக்டர். அந்தப் பேர் சும்மா வந்தது இல்லை. என்னைக் கேட்டா, அவரை 'இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்'னு சொல்வேன். நான் எப்பவோ அவரோட இயக்கத்தில் நடிச்சிருக்க வேண்டியது. ஆனா, வேற வேற காரணங்களால் தள்ளிப்போச்சு. இப்போ கச்சிதமா செட் ஆகி இருக்கு. 'த்ரீ இடியட்ஸ்' இந்திப் படம் மொழி எல்லை எல்லாம் தாண்டி இந்தியாவையே வசீகரிச்சது. அதை இன்னும் அழகேத்தி உருவாக்கி இருக்கிறார் ஷங்கர் சார்!
ஜீவா, ஸ்ரீகாந்த்கூட ஃப்ரெண்ட் ஆகிட்டீங்களா?
ஜீவா ரொம்ப ஜாலி. டேக்குக்குப் போற அந்த விநாடி வரை கமென்ட் அடிச்சுட்டே இருப்பார். அவர் ஸ்பாட்ல இருந்தா யூனிட்டே சந்தோஷமா இருக்கும். ஸ்ரீகாந்த் முன்னாடியே எனக்கு ஃப்ரெண்ட்தான். இப்ப இன்னும் க்ளோஸ் ஆயிட்டார். சத்யராஜ் சார்கிட்ட நிறையப் பேசிக்கிட்டே இருந்தோம். நாங்க ஷூட்டிங் ஸ்பாட்டில் நட்பாகப் பழகினது ஃப்ரேமில் நல்லாவே தெரியும். நல்ல கதையில் இப்படி ஒரு டீமோட நடிச்சது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்போ ஷூட்டிங் முடிஞ்சதும் எங்க டீமை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க எப்படித் தயார் ஆகிட்டு இருக்கீங்க..?
பொது நண்பர் ஒருத்தர் மூலம்தான் கௌதம் மேனன் என்னை இயக்க ஆசைப்படுவதுபத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். சந்திச்சோம். அவர் சொன்ன கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. இங்கேயும் அமெரிக்காவிலும் நடக்கும் கதை. கௌதம் படம் எப்பவும் ஸ்டைலிஷா இருக்கும். 'யோஹன்ஷ படத்துக்காக என் லுக், பாடி லாங்குவேஜ்னு எல்லாத்தையும் டியூன் பண்ணிட்டு இருக்கேன். அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போறேன். இப்படி ஷங்கர், முருகதாஸ், கௌதம்னு காம்பினேஷன் அமையுறது நல்ல விடயம்.

வேலாயுதம் - விமர்சனம்

 
 

குண்டு வெடிப்புகள் நிகழ்த்தி நாட்டை சீர்குலைக்க ஊடுரவும் தீவிரவாதிகளுடன் மோதும் இளைஞன் கதை...
ஜய்யின் ஆக்ஷன் பார்முலா இயக்குனர் எம்.ராஜாவின் அழுத்தமான கதையாக்கம் பிரமாண்ட காட்சி கலவையுடன் படம் விறுவிறுப்பாய் எகிறுகிறது...
கதை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் துவங்குகிறது. தமிழக உள்துறை மந்திரியை தீவிரவாதிகள் கடத்தி செல்லும் ஹெலிகாப்டர் அங்கு இறங்குகிறது. அவர்களிடம் மந்திரி மண்டியிட்டு சென்னையில் குண்டு வெடிப்புகள் நடத்த உதவுதாக வாக்குறுதி அளிக்கிறார். அதன்படி தீவிரவாதிகள் சென்னைக்குள் ஊடுருவுகின்றனர்.
மந்திரி தயவில் நடக்கும் கள்ள நோட்டு அச்சடிப்பு இளம்பெண் கடத்தல் என சமூக விரோத செயலில் ஈடுபடும் கும்பலை பத்திரிகை நிருபர் ஜெனிலியா வெளிச்சத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். அவரை ரவுடிகள் பிடித்து குத்தி சாய்க்கின்றனர்.
ஜெனிலியாவின் இரு கூட்டாளிகளை கொல்கின்றனர். அதிர்ஷ்டவசமாய் உயிர் பிழைக்கும் ஜெனிலியா தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு சதியை கண்டு பிடித்து அதை கடிதமாக எழுதி வைக்கிறார். குண்டு வெடிப்பை தடுப்பேன் என உறுதி அளித்து கீழே வேலாயுதம் என கையெழுத்து போட்டு விட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேருகிறார்.
கிராமத்தில் பால் விற்கும் தொழில் செய்யும் வேலாயுதமான விஜய் தங்கை சரண்யாமோகன் திருமணத்துக்காக சீட்டு கட்டி சேர்த்து வைத்த பணத்தை வாங்க சென்னையில் உள்ள சிட்பண்ட் நிறுவனத்துக்கு வருகிறார். அப்போது ரெயில் நிலையத்தில் தீவிரவாதிகள் பதுக்கிய வெடிகுண்டு மோட்டார்சைக்கிளில் ஏறி திருடனை விரட்டி போய் வெளியில் நிறுத்த அங்கு வெடிக்கிறது.
பயணிகள் காப்பாற்றப்படுகின்றனர். இது போல் கூட்டம் கூடும் பகுதியில் இருக்கும் இன்னொரு வெடிகுண்டு சூட்கேசை எடுத்து தவறி விட்டு போனதாக நினைத்து அதை வைத்தவரிடமே கொண்டு கொடுக்க அங்குள்ள ரவுடி கும்பல் வெடித்து சிதறுகின்றனர். உருவம் தெரியாத வேலாயுதத்தை மக்கள் கடவுளாக கொண்டாடுகிறார்கள்.
ஜெனிலியாவுக்கு விஷயம் தெரிகிறது. விஜய்யிடம் மக்கள் அவரை வேலாயுதமாக கருதுவதை உணர்த்துகிறார். நிஜமாகவே வேலாயுதமாக மாறி தீவிரவாதிகளை அழிக்க நிர்ப்பந்திக்கிறார். ஒரு கட்டத்தில் தான் பணம் போட்ட கம்பெனியை மூடி அங்கிருந்த பணத்தை மந்திரி ஆட்கள் சுருட்டுகின்றனர். பணத்தை இழந்த மக்கள் வேலாயுதம் வந்து எங்களுக்கு பணத்தை வாங்கி கொடுப்பார் என நம்பிக்கை குரல் எழும்புகின்றனர். அதன் பிறகு விஜய் எடுக்கும் வேலாயுதம் அவதாரமும் தீவிரவாதிகளுடன் நடக்கும் சண்டைகளும் மீதி கதை...
காமெடி, சென்டி மென்ட், ஆக்ஷனில் விஜய்யை இன்னொரு தளத்துக்கு தூக்கியுள்ள படம். தங்கை பாசத்தில் சிக்சர் அடிக்கிறார். கோழி பிடிக்க வீட்டு கூரைகளில் தாவி குதித்து ஓடி ஒவ்வொரு வீட்டுக்காரையும் இம்சை படுத்துவது... கிணற்றில் விழுந்த தங்கை மோதிரத்தை எடுக்க உள்ளே தங்கம் இருப்பதாக சொல்லி ஊர்க்காரர்களை தண்ணீர் இறைக்க வைத்து மோதிரத்தை கண்டு பிடித்து கம்பி நீட்டுவது... தங்கை சமைத்த ருசி இல்லாத உணவை நண்பர்களுடன் சாப்பிட்டு புகழ்வது.. என காமெடியர்களை தூக்கி சாப்பிடும் காமெடி பண்ணுகிறார்.
வேலாயுதம் ஆன பின் கதை ஆக்ஷன் ரூட்டுக்கு தாவுகிறது. சிட்பண்ட் பணத்துடன் ஓடும் ரவுடிகளை கடற்கரை யோரம் மோதி அழித்து கடலுக்குள் வீசுவது வேகம்.. ரெயிலை தீவிரவாதிகள் கடத்தி தொழிற் சாலையில் மோத விட்டு விஷ வாயுவை பரப்பி மக்களை கொல்ல முயற்சிப்பதும் விஜய் அதை தடுக்க ஆக்ரோஷமாக மோதுவதும் ஹாலிவுட்டுக்கு இணையான பிரமிப்பு.
விஜய்யின் முறைப்பெண் ஹன்சிகா கிராமத்து தேவதை. பத்திரிகை நிருபர் கேரக்டரில் ஜெனிலியா வலு சேர்க்கிறார். சரண்யா மோகன் பாசக்கார தங்கை. ஊர்க்காரர்களை காப்பாற்ற அவர் செய்யும் தியாகம் உலுக்குகிறது. திருடனாக வரும் சந்தானம் காமெடி கலகலப்பின் உச்சம். மகள் காதலுக்கு உதவும் எம்.எஸ்.பாஸ்கர் சிரிக்க வைக்கிறார். ரெயில் சண்டைக்கு பின் கதை நீள்வதை குறைத்து இருக்கலாம். கமர்சியல் கதையை விறு விறுப்பாக காட்சிப்படுத்தி ஒன்ற வைக்கிறார் இயக்குனர் ராஜா. பிரியன் கேமராவில் பிரமாண்டத்தின் பதிவு. விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

Popular Posts

Popular Posts