Monday, November 28, 2011

விஜய்யுடன் நடிக்க மறுத்தேனா? பிரியங்கா சோப்ரா பதில்!

 
 
 
'விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுக்கவில்லைÕ என்றார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. 'பர்ஃபி' என்ற இந்தி பட ஷூட்டிங்கிற்காக பொள்ளாச்சிக்கு வந்துள்ளார் பாலிவுட் ஹீரோயின் பிரியங்கா சோப்ரா. அவர் நேற்று பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது: விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழில் நடித்திருக்கிறேன். அதன் ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்தது. கிட்டத்தட்ட அதே இடங்களில்தான் 'பர்ஃபி' ஷூட்டிங் நடந்தது. இதில் பங்கேற்றபோது பழைய நினைவுகள் என் மனதில் நிழலாடியது. 'ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க விஜய் நடிக்கும் புதிய படத்தில் நீங்கள் நடிக்க மறுத்தது ஏன்? என்று கேட்கிறார்கள். தமிழில் விஜய் படம் மூலம்தான் அறிமுகமானேன். முருகதாஸ் மற்றும் விஜய்யுடன் பணியாற்ற வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் அப்படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் கால்ஷீட் கேட்கவில்லை. நல்ல வாய்ப்பாக வந்தால் மீண்டும் தமிழ் படத்தில் நிச்சயம் நடிப்பேன். இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.



Sunday, November 27, 2011

விஜய் படத்துக்கு தலைப்பு 'துப்பாக்கி'... ஏ ஆர் முருகதாஸ் சம்பளம் ரூ12 கோடி

 

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு 'துப்பாக்கி' என பெயர் சூட்டியுள்ளனர்.

இந்தப் படத்தில் ஏ ஆர் முருகதாஸுக்கு சம்பளமாக ரூ 12 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தப் படத்தை ஆரம்பத்தில் எஸ்ஏ சந்திரசேகரனும் ஜெமினி பிலிம்ஸும் தயாரிக்கவிருந்தனர். அப்போதே ஏ ஆர் முருகதாஸ் சம்பளம் ரூ 12 கோடி என முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் பின்னர் இந்த சம்பளம் அதிகம் என்று தயாரிப்பு தரப்பில் யோசித்ததால், இழுபறி நீடித்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு கலைப்புலி தாணுவுக்கு கைமாறியதால், முருகதாஸ் சம்பளத்துக்கு பிரச்சினை இல்லாமல் போனது. விஜய்க்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் வெளியாகவில்லை.

படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 65 கோடி என்கிறார்கள். விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை. இந்த அளவுக்கு அவரது படம் பிஸினஸ் ஆகுமா என்ற கேள்வி இருப்பதால், விநியோகஸ்தர்கள் மலைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

காஜல் அகர்வால் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். விரைவில் துப்பாக்கி படப்பிடிப்பு தொடங்குகிறது.

நண்பன் திரைப்பட ட்ரைலர்

 
 
விஜய் , ஜீவா ,ஸ்ரீகாந்த் நடிக்க ஷங்கர் ரீமேக் ( 3 idiots )செய்த படம் நண்பன் ட்ரைலர் முதன் முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளது பார்த்து மகிழுங்கள்.
nanban movie trailer watch online free







Popular Posts

Popular Posts