Monday, March 5, 2012

விஜயின் துப்பாக்கியில் புதிய பிரச்சனை

 


விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜம்வால், சத்யன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்காக தற்போது ஆக்ஷன் காட்சிகளை மும்பையில் படமாக்கி வருகிறார்கள். இச்சண்டை காட்சிக்காக புதுவிதமாக நிறைய விஷயங்களை கையாண்டு வருகிறாராம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

கெளதம் மேனன், இயக்குனர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூவரின் படங்கள் என்றாலே படத்தின் எடிட்டர் ஆண்டனியாக தான் இருக்கும். ஆனால் '7ம் அறிவு' படத்தின் எடிட்டிங்கின் போது ஏ.ஆர்.முருகதாஸுக்கும் ஆண்டனிக்கும் இடையே சிறு பிரச்னையாம்.

ஆகையால் 'துப்பாக்கி' படத்தின் எடிட்டராக பணியாற்ற ஸ்ரீகர் பிரசாத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் முருகதாஸ். மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து', 'ராவணன்' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் ஸ்ரீகர் பிரசாத்.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக தேசிய விருதினை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, March 4, 2012

துப்பாக்கி படத்தில் அரை நிர்வாண காட்சியில் காஜல் அகர்வால்

 
 

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகும் துப்பாக்கி படத்தில் அரை நிர்வாண காட்சியில் ஹீரோயின் காஜல் அகர்வால் மறுப்பு தெரிவித்தாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சமீபத்தில் ஆங்கில இதழ் ஒன்றுக்காக அரை நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் காஜல் அகர்வால். இதனால் மகளிர் அமைப்பினர் மற்றும் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதைதொடர்ந்து விஜய் ஜோடியாக துப்பாக்கி படத்தில் நடித்து வருகிறார். கதைக்கு முக்கியத்துவம் என்பதால் அரை நிர்வாண காட்சியில் நடிக்குமாறு ஹீரோயினிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். இதற்கு காஜல் மறுப்பு தெரிவித்ததாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.


இது பற்றி காஜலின் அம்மா வினைய் கூறுகையில்,
காஜலை பற்றி இயக்குனர் முருகதாஸுக்கு நன்றாகவே தெரியும். அவள் எப்படிப்பட்ட வேடங்களில் நடிப்பாள். அப்படி இருக்கும்போது இது போன்ற ஒரு காட்சியில் அவர் நடிக்க கேட்டதாக வரும் தகவலல் உண்மையில்லை என்றார்.

மீண்டும் விஜய்க்கு தம்பியாக ஜெய்

 


விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தில் அவரது தம்பியாக நடிக்க இருக்கிறார் நடிகர் ஜெய். ஜெய் முதன்முதலில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது விஜய்யின் பகவதி படத்தில் தான். அந்த படத்தில் விஜய் தம்பியாக நடித்தார். அதன்பிறகு சென்னை-28, கோவா என்று பல படங்களில் நடித்து படிப்படியாக உயர்ந்து, இப்போது ஹீரோவாக உயர்ந்து இருக்கிறார். இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது ஜெய்க்கு. அதுவும் விஜய்யின் தம்பி கேரக்டர் வேடத்திற்கு. ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் என பெரிய கூட்டணி படம் என்பதால் ஜெய்யும் மறுக்காமல் உடன் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

Popular Posts

Popular Posts