Monday, October 17, 2011

சங்கரின் ஜாலி பேட்டி

 
ஷங்கர் இயக்கத்தில் முதன் முறையாக விஜய் நடித்து இருக்கும் படம் 'நண்பன்'. இலியானா நாயகியாக நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஜெமினி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

தீபாவளி தினத்தன்று வெளியீடு என்று தொடங்கப்பட்ட படம் தான் 'நண்பன்'. ஆனால் 'வேலாயுதம்' படத்தின் தாமதத்தால் தீபாவளி வெளியீடாக 'வேலாயுதம்' வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் 'நண்பன்' படத்தின் இசை மற்றும் படம் வெளியீடு எப்போது என்ற கேள்விக்கு ஷங்கர் தனது இணையத்தில் கூறியிருப்பது " நண்பன் படத்தின் படப்பிடிப்பு 100% முடிவடைந்தது. 'வேலாயுதம்' படம் தீபாவளி தினத்தன்று வெளிவர இருப்பதால், 'நண்பன்' படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. ALL IS WELL" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts