பாலிவுட் பாக்ஸ் ஆஃபீஸில் 150 கோடி வசூலை அள்ளிய படம் தபாங்! சல்மான் கான், சோனாக்ஷி சின்கா நடித்த இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கான ஒஸ்தியை கில்லி பட இயக்குனர் தரணி இயக்கியுள்ளார். சல்மான் கான் கதாபாத்திரத்தில் சிம்புவும், சோனாக்ஷி நடித்த கதாபாத்திரத்தில் ரிச்சா காங்கோபாத்யாவும் நடித்திருக்கும் இந்தப் படத்தை 87 நாட்கள் ஒரு நாள் கூட விடுமுறை விடாமல் மைசூரில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி மொத்தப் படத்தையும் முடித்து சாதனை படைத்திருக்கிறார் தரணி.
தமன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது.
கே.எஸ். ரவிகுமார், விஜயகுமார், வாலி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற இந்த விழாவில் ஆச்சர்யமாக ஆஜராகியிருந்தார் இளையதளபதி விஜய். 3 இடியட்ஸ் ரீமேக்கில் மூன்று இடியட்டுகளில் ஒருவராக நடிக்க முதலில் சிம்புவும் அழைக்கப்பட்டார். ஆனால், "நான் அஜித்தின் தீவிர ரசிகன். விஜய் நடிக்கும் படத்தில் நடித்தால் அஜித் ரசிகர்கள் என்னிடம் கோபித்துக் கொள்வார்கள்" என்று விஜய்க்கு எதிராக பேசி சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் சிம்பு. ஆனால் சிம்புவின் இந்த சர்ச்சை ஸ்டேட்மெண்டை மனதில் வைத்துக்கொள்ளாத விஜய், ஒஸ்தி படத்தின் இயக்குனர் தரணியின் நட்பான அழைப்பை ஏற்று ஒஸ்தியின் இசையை வெளியிட்டார். இசைத்கட்டை வாலி பெற்றுக்கொண்டார்.
இசை வெளியீட்டுக்கு மறுநாள் நடந்த ஒஸ்தி பத்திரிகையாளர் சந்திப்பில் இன்னோரு ஆச்சர்ய விருந்தினர் தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரியின் மகனும் பிரபல ஹீரோவுமான ஜித்தன் ரமேஷ். முதலில் சிம்பு நடிப்பதாக இருந்த கோ படத்தில் ஜித்தன் ரமேஷின் தம்பி ஜீவா நடித்தார். இதனால் சிம்புவுக்கும்- ஜீவாவுக்கும் மனகசப்பு என்று செய்திகள் வெளியாயின. இதை உறுதி செய்வது போல ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டிகள் கொடுத்துக் கொண்டார்கள். ஆனால் தற்போது தனது தம்பிக்கும் சிம்புவுக்கும் உள்ள பிரச்னையை ஊதி பெரிதாக்காமல் சிம்புவின் அண்ணனாக ஒஸ்தி படத்தில் நடித்துக் கொடுத்ததோடு, பிரஸ்மீட்டில், "சிம்பு நல்ல நண்பன்" என்று பாராட்டினார்.
No comments:
Post a Comment