Saturday, October 22, 2011

வேலாயுதம் தீபாவளியில் வெல்லவது நிஜம் - ராஜா பரபர பேட்டி

 
 

மகள் வர்ணிகாவையும் அழைத்துக் கொண்டு பிரஸ்சை மீட் பண்ண வந்திருந்தார்.ஜெயம் ராஜா. இந்த தீபாவளி வழக்கத்தை போல இல்லாமல் இந்த முறை ரொம்ப விசேஷமோ விசேஷம். இதுவரை அவர் இயக்கிய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்த தீபாவளிக்கு விஜய் என்ற மாஸ் முதலைக்கு ரீல் ரீலாக தீனி போட்டிருக்கிறாரல்லவா? அந்த சந்தோஷம்தான் முகத்தில் தாண்டவமாடியது!
ஜவுளிக்கடைக்கு துணி எடுக்கப் போனா அங்க கேட்கிறான், சார் இந்த வருஷம் எந்த படத்தை டப்பிங் பண்ண போறீங்கன்னு. டப்பிங்குக்கும் ரீமேக்குக்கும் வித்தியாசம் தெரியாதவங்க கூட லேசா கிண்டல் பண்ணுற அளவுக்கு நான் பண்ணிய எல்லா படங்களும் ரீமேக்தான். ஆனால் வேலாயுதம் என்னோட கற்பனையில் உருவான படம். ஆசாத் என்ற தெலுங்கு படத்திலிருந்து ஒரு சின்ன லைன் மட்டும் எடுத்திருக்கேன். அதுக்கு எனக்கு உரிமை உண்டு. ஏன்னா இந்த படத்தை இயக்கிய திருப்பதிசாமியும் நானும் திக் பிரண்ட்ஸ். இந்த கதையை உருவாக்கும்போதே நான் அவரோட பல நாள் டிஸ்கஷன்ல இருந்திருக்கேன் என்றார்.
விஜய் மார்க் போடுகிற ஸ்டேஜையெல்லாம் கடந்துவிட்டார். இன்றைக்கு அவர் பெரிய மாஸ் ஹீரோ. படம் வெளியாகிற நாளில் தியேட்டருக்கு திரண்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள். நீங்கள் சொல்வது போல தோல்வி என்பதையெல்லாம் தாண்டிய மாஸ் ஹீரோ அவர். வேலாயுதம் விஜய் படங்களிலேயே தி பெஸ்ட் படமாக இருக்கும். ரா ஒன் என்ன, ரா நூறு கூட வரட்டுமே, ஆயிரம் அறிவு கூட வந்து மோதட்டுமே? வேலாயுதம் பெரிய வெற்றியடையும். அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts