Wednesday, November 9, 2011

எந்திரன், இந்தியன் கெட்டப்பில் விஜய்!

 
 
 
ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டத்துக்கு பஞ்சம் இருக்காது. எந்திரன் ஹிட்டிற்கு பிறகு இளைய தளபதி விஜய்-யை வைத்து 'நண்பன்' படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். தனது முந்தைய மெகா ஹிட் படங்களான 'எந்திரன்' மற்றும் இந்தியன் படங்களை நினைவு கூறும் வகையில் 'நண்பன்' படத்தில் விஜய்-க்கு எந்திரன் 'ரோபோ', இந்தியன் 'தாத்தா' கெட்டப் வைத்து பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளார். மேலும் மூத்த கலைஞர்களான கமல், ரஜினிக்கு மரியாதை செய்யும் வகையில் பாடல் படமாக்கப்பட்டுள்ளதாக ஷங்கர் கூறினார். இதனையடுத்து அந்த பாடல் பிரம்மாண்ட செலவில் ஷூட்டிங் செய்யப்பட்டது. '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக்கான 'நண்பன்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ், சத்யன், எஸ்.ஜெ.சூர்யா, என கோலிவுட் நட்சத்திர பட்டாளமே இணைந்து இந்த பொங்கலுக்கு விருந்து தர காத்திருக்கிறது.



No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts