கடந்த 7ஆம் தேதி உலகநாயகன் கமலஹாசன் தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடினார். முக்கிய தலைவர்கள், நட்சத்திரங்கள் என எல்லோரிடமிருந்தும் பிறந்தநாள் பாராட்டுக்கள் கமலுக்கு குவிந்தன. இந்நிலையில், தன்னை வாழ்த்திய அனைவருக்கும் கமல் ஒரு ரகசிய பார்ட்டி அளித்திருக்கிறார். இந்த பார்ட்டியில் நடிகர் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
பார்ட்டியின் இடையே திடீரென கமல் விஜய்யை அழைத்து தனக்காக நடனமாட வேண்டும் என கேட்டிருக்கிறார். அதிர்ச்சியில் உரைந்து போன விஜய் சற்று சுதாரித்துக் கொண்டு பின்னர் அடக்கமாக சில ஸ்டெப்களை போட்டிருக்கிறார். கமலும் அவருடன் இணைந்து ஆடி இருக்கிறார். கமலின் பிறந்த நாளன்று விஜய் நடனமாடியது அவரது வாழ்வில் மறக்க முடியாத தருணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment