நானும் இயக்குனர் சந்தோஷ் சிவனும் அடுத்த படத்தில் இணைகிறோம் என்று விஜய் கூறியுள்ளார். |
பிரபல கமெராமேன் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள உருமி பதினைந்தாம் நூற்றாண்டு உறைவாள் படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. |
இவ்விழாவில் மணிரத்னம், முருகதாஸ், எஸ்.ஜே.சூர்யா மூவரும் படத்தின் பாடல்களை வெளியிட்டார்கள்.
பிரபுதேவா, பிருத்விராஜ், தபு, வித்யாபாலன்,ஜெனிலியா, நித்யாமேனன் ஆகியோர் நடித்த பாடல்கள் திரையிடப்பட்டன.
விழாவில் நடிகர் அரவிந்த் ஸ்வாமி, படத் தயாரிப்பாளர்கள் திருமதி சுகுமாரன், ஷாஜி நடேஷன், இசையமைப்பாளர் தீபக் தேவ், பரத் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் வரும் பிருத்விராஜுக்கு தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்ததால் இந்த விழாவில் அவரால் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாம். இதற்காக பிருத்விராஜ் மனம் வருந்தியதை அவரது தாயார் கூறியுள்ளார்.
உருமி படத்தின் இசை குறுந்தகடை விஜய் வெளியிட, கவிப்பேரரசு வைரமுத்து பெற்றுக்கொண்டார். இப்படம் குறித்து விஜய் கூறியதாவது, சந்தோஷ் சிவனும் நானும் அடுத்த படத்தில் இணைகிறோம்.
படத்தின் பாடல்களில் அவருடைய ஒளிப்பதிவு ஓவியமாக என்னை ஈர்த்துள்ளது. இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் இது வெற்றிப்படமாக அமையும் என விஜய் வாழ்த்தியுள்ளார்.
படக் குழுவினர் கொடுத்த நீண்ட உருமி வாளை விஜய் மேடையில் மெதுவாக சுழட்ட சுற்றியிருந்தவர்கள் லேசாக மிரண்டார்களாம்.
No comments:
Post a Comment