ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தின் தயாரிப்பாளர், திடீரென மாற்றப்பட்டார். '7ஆம் அறிவு' படத்துக்குப் பிறகு, விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் படத்தை விஜய் தயாரிக்க முடிவு செய்திருந்தார். விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தமானார். 'துப்பாக்கி' என்று தலைப்பு வைத்துள்ள இதன் ஷூட்டிங் இன்று தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கு இயக்குனர் முருகதாஸ் 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், முதலில் ஒப்புக்கொண்ட பின், அதை குறைக்குமாறு விஜய் தரப்பில் சொன்னதாகவும் கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது. அந்த சம்பளம் இல்லையென்றால் படத்தை இயக்க விரும்பவில்லை என்று முருகதாஸ், கூறிவிட்டாராம். இதையடுத்து, நேற்று நண்பகல் முதல், அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று விஜய் தரப்பில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் தயாரிப்பாளர் தாணு இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தார். இதையடுத்து பிரச்னை சுமூகமாக முடிந்தது. வரும் 26ம் தேதி முதல் மும்பையில் ஷூட்டிங் தொடங்குகிறது.
No comments:
Post a Comment