நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுக்கவில்லை என்று இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். |
பர்பி என்ற இந்தி படபிடிப்பிற்காக பொள்ளாச்சிக்கு வந்துள்ளார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. |
அப்போது பிரியங்கா கூறியதாவது: விஜய் நடித்த தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழில் நடித்திருக்கிறேன். அதன் படபிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது.
கிட்டத்தட்ட அதே இடங்களில்தான் பர்பி படபிடிப்பு நடந்தது. இதில் பங்கேற்ற போது பழைய நினைவுகள் என் மனதில் நிழலாடியது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க விஜய் நடிக்கும் புதிய படத்தில் நீங்கள் நடிக்க மறுத்தது ஏன்? என்று கேட்கிறார்கள். தமிழில் விஜய் படம் மூலம்தான் அறிமுகமானேன்.
முருகதாஸ் மற்றும் விஜய்யுடன் பணியாற்ற வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் அப்படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் கால்ஷீட் கேட்கவில்லை. நல்ல வாய்ப்பாக வந்தால் மீண்டும் தமிழ் படத்தில் நிச்சயம் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment