Sunday, November 6, 2011

கொலிவுட்டில் விஜய்யின் வெற்றிப் பயணம்

 
 

தமிழில் ரீமேக் படங்களில் நடிப்பதை ஆரோக்கியமாக கருதுகிறேன் என்று விஜய் கூறியுள்ளார்.
காவலன் படத்துக்கு பிறகு வேலாயுதம் படம் வெற்றி பெற்றிருப்பதாக இளைய தளபதி விஜய் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நண்பன் படத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடித்து முடித்த பின், இயக்குநர் முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். மேலும் சினிமாவில் வித்தியாசமான படங்களிலும், ரீமேக் படங்களிலும் நடிப்பது பற்றியும் அவர் பேசியுள்ளார்.
இளைய தளபதி கூறியதாவது, தமிழில் ரீமேக் படங்களில் நடிப்பதை ஆரோக்கியமாக கருதுகிறேன். த்ரீ இடியட்ஸ் மாதிரி படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறேன்.
ஷங்கரின் இயக்கத்தில் தமிழில் வெளியாகும் நண்பன் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புது உற்சாகத்தைத் தரும். படத்தில் நடிப்பவர்களை இயக்குனர் ஷங்கர் உற்சாகப்படுத்தும் விதமே அமர்க்களம் தான் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.
மேலும் கமெர்சியல் சினிமாவில் வித்தியாசமான வகையில் நடித்து வெற்றி பெற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts