Wednesday, November 30, 2011

துப்பாக்கியில் காக்கிச் சட்டை அணியும் விஜய்

 
 
டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடக்க விழா இல்லாமல் பத்திரிகை விளம்பரத்தோடு 'துப்பாக்கி படப்பிடிப்பை தொடங்க இருக்கிறது
 
ஏ.ஆர்.முருகதாஸ்- இளையதளபதி விஜய் கூட்டணி. முதல்முறையாக இந்தக் கூட்டணி ஒன்றினைவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியிருகிறது.
ஆனால் இன்னும் துப்பாக்கி படம் பற்றிய தகவல்கள் சூடு பிடிக்க வில்லை. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரீஸ் ஜயராஜ் இசையமைக்க இருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் இந்தப் படத்தில் விஜய் ஏற்க இருக்கும் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் முருகதாஸ் வட்டாரத்தில் இருந்து அனல் பறக்கும் தகவல் கசிகிறது. துப்பாக்கி படத்தில் விஜய் இளம் போலீஸ் கமிஷனராக நடிக்க இருக்கிறார் என்ற தகவல்தான் அது.
ஏற்கனவே போக்கிரி படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார் விஜய். ஆனால் அதில் முழுமையான போலீஸ் அதிகாரி கேரக்டர் அமைய வில்லை. ஆனால் துப்பாக்கி ஒரு துணிச்சலான போலீஸ் அதிகாரியின் கதை என்கிறார்கள். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முப்பைக்கு தூக்கி அடிக்கப் படும் ஒரு தமிழ் திகாரியின் கதை என்கிறார்கள். முருகதாஸுடன் சந்தோஷ் சிவன் மட்டுமல்ல, முதல் முறையாக எழுத்தாளர் ஜெயமோகனும் இணைய இருகிறார். இந்தபடத்துக்கு ஜெயமோகனே வசனம் எழுதுகிறார்.
இதற்கிடையில் தமிழ்தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரேநேரத்தில் எடுக்க திட்டமிட்ட முருகதாஸுக்கு ஒரு சிறு பின்னடைவாம். தெலுங்கிலும் ' துப்பாக்கி என்ற தலைப்பிலேயே படத்தை வெளியிட விரும்பி, தெலுங்கு பிலிம் சேம்பரில் இந்த தலைப்பை பதிவு செய்யச் சென்றாராம்.
ஆனால் அங்கே பிரபல தயாரிப்பாளர் 'ஜிங்கா ஹரீஷ் பாபு' என்பவர் இந்தத் டைட்டிலை ஏற்கனவே பதிவு செய்து, படத்தை தொடங்கும் நிலையில் இருகிறாராம். அது நக்‌ஷலைட்டுகள் பற்றிய கதை என்பதால் துப்பாக்கி தலைப்பை தரமுடியாது என்று மறுத்து விட்டராம் ஹரீஷ் பாபு. இதனால் தற்போது தமிழில் மட்டும் படத்தை எடுத்து விட்டு, பிறகு தெலுங்கில் டப் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருகிறார்களாம்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts