அனைத்து வாசகர்களுக்கும் எனது இதயம் கனிந்த 2012 புதுவருட வாழ்த்துக்கள். அன்புடன் கிஷோர்.
சங்கரின் முதலாவது ரீமேக் படமான நண்பன் படம் ஜனவரி 12 அமெரிக்காவில் வெளியிடப்பட உள்ளது. அந்த நாளே உலகம் முழுவதும் வெளிவர உள்ளது.
இப்படத்தின் தயாரிப்பு ஜெமினி பிலிம்ஸ். இப்படம் 3 இடியட்ஸ் ஹிந்தி மெகா ஹிட் படத்தின் ரீமேக் ஆகும்.இப்படம் 2012ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கும் படம் ஆகும். தொடர்ந்து காவலன் வேலாயுதம் என ஹிட் படங்களை கொடுத்த விஜய் கோ வெற்றியை கொடுத்த ஜீவா சதுரங்கம் படம் மூலம் அனைவரையும் பாராட்ட வைத்த சிறிகாந்த் தெலுங்கில் நம்பர் ஒன் நடிகை இலியான sms புகழ் அனுயா பிரபல நடிகர் சத்தியராஜ் சிறந்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்க பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் ஹரிசின் அருமையான இசையில் இப்படம் பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முந்தி அதாவது ஜனவரி 12 உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இந்தியாவில் அதிகளவான திரையரங்குகளை இதுவரை கைப்பற்றி உள்ள நண்பன் படம் ஏனைய திரையரங்குகளிலும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. நல்ல கதையுள்ள மற்றும் நகைசுவை மற்றும் அனைத்து விடயமும் கலந்த படமாக வர உள்ளது நண்பன்.
No comments:
Post a Comment