பொங்கல் பண்டிகை தினத்தில் நண்பன் படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் டைரக்டர் ஷங்கர் தீவிரமாக இறங்கியிருக்கிறார். விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா மூவரும் நடித்துள்ள படம் நண்பன். டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் இப்படத்தின் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவினை ஹாரிஸ் ஜெயராஜின் மேடை இசை நிகழ்ச்சியோடு நடத்த முடிவெடுத்துள்ளனர். இப்படம் இந்தியில் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்பதால் அப்படத்தில் நடித்த அமீர்கானையும் விழாவுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ஒருபுறம் பாடல் வெளியீட்டு விழா வேலைகள் விறுவிறுப்பாக நடந்தாலும், படத்தினை பொங்கலுக்கு திரைக்கு கொண்டுவரும் எண்ணத்தில் விறுவிறுப்பாக இயங்கி வருகிறார் டைரக்டர் ஷங்கர்.
No comments:
Post a Comment