Thursday, December 29, 2011

பொங்கல் போட்டி

 
 
வரும் பொங்கலுக்கு 'நண்பன்', 'வேட்டை', மற்றும் '3' போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டன. இதில் ஷங்கர் இயக்கத்தில் நண்பன், லிங்குசாமி இயக்கத்தில் வேட்டை மற்றும் ஐஸ்வர்யா இயக்கத்தில் '3' படங்களுக்கு இடையே பலத்த போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் படத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு, தற்போது அவர் இளைய தளபதி விஜய்யுடன் கூட்டணி வைத்திருப்பதால் 'நண்பன்' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உண்டு. இந்தியில் வெளியான '' படத்தின் ரீமேக் படம் தான். ஆனாலும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளதால் புதுமைக்கு பஞ்சம் இருக்காது. அதே போல் லிங்குசாமியின் 'வேட்டை' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உண்டு. லிங்குசாமி படத்திற்கு விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லை என்பதால் இவரது படத்திற்கு ரசிகர்கள் உண்டு. இந்த படத்தில் மாதவன், ஆர்யா கூட்டணி வெற்றி கூட்டணியாக மாற துடித்துக்கொண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி 'why this kolaveri di' பாடல் உலக முழுவதும் சூப்பர் ஹிட், இந்த பாடல் '3' படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ளது. தனுஷின் துடிப்பான நடிப்பும் படத்திற்கு மிக பலம் சேர்க்கும். சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் முதல் படமே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொங்கல் தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான போட்டியை தரும் என்தில எந்தவித சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts