அமீர்கான், மாதவன் நடித்து இந்தியில் ஹிட்டான "3 இடியட்ஸ்" படம் தமிழில் "நண்பன்" என்ற பெயரில் "ரீமேக்" ஆகிறது. விஜய், சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா ஆகியோர் நடிக்கின்றனர். ஷங்கர் இயக்குகிறார். படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடக்கிறது. பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை வருகிற 15-ந் தேதி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்த உள்ளனர். நடிகர், நடிகைகளின் நடனம், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த விழாவுக்கு அமீர்கானை அழைக்க முடிவெடுத்துள்ளனர். அவரை அழைத்து வரும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே சல்மான்கான், பெப்சி விஜயன் இயக்கிய மார்க்கண்டேயன் படவிழாவில் பங்கேற்க சென்னை வந்தார். ஷாருக்கான் தனது "ரா ஒன்" பட ரிலீசையொட்டி சென்னைக்கு வருகை தந்ததுடன் ரஜினியையும சந்தித்து விட்டு சென்றார். இவர்களை தொடர்ந்து அமீர்கானும் வருகிறார்.
No comments:
Post a Comment