Wednesday, February 29, 2012

‘துப்பாக்கி’ படத்தில் சொந்த குரலில் பாடும் விஜய்!

 

துப்பாக்கி படத்தில், ஹீரோவாக நடித்ததுடன் ஒரு பாட்டு ஒன்னு பாடியிருக்கிறார் நடிகர் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இவர்களுடன் ஜெயராம், சத்யன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையை சுற்றி நடப்பதால் மும்பையில் சூட்டிங்கை நடத்தி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்நிலையில், இப்படத்தை பற்றி தினம் ஒரு செய்தி வெளிவந்து கொண்டு இருக்கிறது. துப்பாக்கியில் விஜய் ஹீரோவாக நடித்து இருப்பதுடன், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அசத்தலான பார்ட்டி சாங் ஒன்றும் பாடியிருக்கிறார்.

இதுகுறித்து ஹாரிஸ் தனது ப்ளாக்கில் கூறியிருப்பதாவது, சும்மா ஒரு முயற்சியாகத்தான் விஜய்யை பாட வைத்தோம். ஆனால் அதுவே ரொம்ப நன்றாக வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும் ரெக்காரீடிங் தியேட்டரில் விஜய் பாடிய போட்‌டோவையும் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே விஜய் பல படங்களிலும், ரசிகர்களின் விருப்பத்திற்காக பல மேடைகளிலும் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts