Saturday, February 25, 2012

‘எண்கவுண்ட்ர் ஸ்பெஷலிஸ்ட்டாக’ விஜய்

 


முக்கியமாக சூர்யாவை வசூல் ஹீரோவாக உயர்த்திய படங்களாக கஜினி 7-ஆம் அறிவு ஆகிய படங்கள் முக்கியமானவை.

இப்படிப்பட்ட நிலையில் ஏற்கனவே வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் இளையதளபதி விஜய், முருகதாஸுடன் கூட்டணி வைத்தால் எப்படியிருக்கும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த கூட்டணியாக இருந்தது.

தற்போது இந்த கூட்டணி அமைந்து விட்டதால் விஜய், முருகதாஸ் ஆகிய இரண்டு தரப்பு ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்துவருகிறார்கள். முக்கியமாக விஜய்க்கு என்ன மாதிரியான கதையை தேர்வு செய்து இருப்பார் என்ற யூகங்கள் கிளம்பின.

இதில் மீடியாவும் இணைந்து கொண்டு தனி, திரைக்கதை வசனமே எழுதி வந்தது. அதற்கு இனி அவசியமில்லை. 4தமிழ்மீடியா தனது வாசகர்களுக்காக இந்த அதிரடி பிரத்தியேக தகவலை வழங்குகிறது.

துப்பாக்கி படத்தில் விஜய் 'எண்கவுண்ட்ர் ஸ்பெஷலிஸ்ட்டாக' நடிக்கிறார். துப்பாக்கி படத்தில் மாராட்டிய மாநில போலீசாரால், தமிழகத்திலிருந்து கேட்டுப் பெறப்படும் இளம் எண்கவுண்டர் அதிகாரியாக நடிக்கிறாராம்.

இதற்காவே விஜய் போலீஸ் அதிகாரிக்கான முறையான ஹேர் கட் செய்திருக்கிறார் என்ற தகவலை நமக்கு தருகிறார்கள் துப்பாக்கி டீமின் இயக்குனர் டிபார்ட்மெண்ட் சேர்ந்த நம்பிக்கையான நட்பு வட்டத்தில் இருந்து.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts