Wednesday, February 8, 2012

முதல்ல சூர்யா, இப்ப விஜய்

 
 
 
நடிகை காஜல் அகர்வால் ஒரே குஷியாக உள்ளாராம். அதற்கு காரணம் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்.
நடிகை காஜல் அகர்வால் ஆண்கள் பத்திரிக்கைக்கு அரை நிர்வாணப் போஸ் கொடுத்தார் என்று பிரச்சனை வந்தபோதிலும் அவர் காட்டில் ஜில்லென்று என்று மழைக் கொட்டிக் கொண்டு தான் இருக்கிறது. தெலுங்கில் முன்னணி நாயகர்களின் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இது தவிர தமிழில் சூர்யாவுடன் மாற்றான் படத்தில் ஒப்பந்தமாகி ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.
ஏற்கனவே தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யாவுடன் நடித்த பெருமிதத்தில் இருந்த காஜல் அடுத்து நம்ம இளைய தளபதி விஜயுடன் துப்பாக்கி படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். அப்புறம் அவர் குஷியாக இருக்க மாட்டாரா என்ன. மாற்றான் ஷூட்டிங் முடிந்த கையோடு விஜயுடன் நடிக்க சென்றுவிட்டார் காஜல்.
ஏய், பார்த்தியா முதலில் சூர்யாவுடன் நடித்தேன். அந்த ஷூட்டிங் முடிந்த கையோடு தற்போது கோலிவுட்டின் இன்னொரு முன்னணி ஹீரோவான விஜய்யுடன் நடிக்கிறேன். இதெல்லாம் நான் செய்த பாக்கியம் தான் என்று தனது தோழிகளிடம் சொல்லி, சொல்லி பூரிக்கிறாராம்.
பத்திரிக்கை பிரச்சனைக்குப் பிறகு காஜலின் மார்க்கெட் சரியும் என்று நினைத்தவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. அது இப்போதைக்கு சரியாது என்றுதான் தெரிகிறது.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts