விஜய்யின் "வேலாயுதம்" படத்தில் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா இணைந்து நடித்துள்ளனர். ராஜா இயக்கி உள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. படப்பிடிப்பில் ஹன்சிகாவுக்கும் ஜெனிலியாவுக்கும் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இருவரும் தனக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ராஜாவை நிர்ப்பந்தப்படுத்தியதாகவும் கூறப்பட்டது. யார் பெரியவர் என்பதில் இருவருக்கும் ஈகோ இருந்ததாக ராஜாவும் உறுதிப்படுத்தினார்.
இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:- "வேலாயுதம்" படத்தில் விஜய்யுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெனிலியாவுக்கும் எனக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதாக வெளியான செய்தி எனக்கு அதிர்ச்சி அளித்தது. இயக்குனர் ராஜாவே இதை தெரிவித்தார் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவர் என்ன சொன்னார் என்பது எனக்கு முழுமையாக தெரியாது. நானும் ஜெனிலியாவும் நல்ல தோழிகள். அவருடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
"வேட்டை மன்னன்" படத்தில் சிம்புவுடன் நடிக்க என்னை அணுகினர். கதை பிடித்து இருந்தது. அதில் எனது கேரக்டர் என்ன என்பதை வெளிப்படுத்த முடியாது. சித்தார்த்துடன் தெலுங்கு படமொன்றிலும் நடிக்கிறேன். உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக "ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
No comments:
Post a Comment