Wednesday, October 12, 2011

விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசை : முன்னாள் உலக அழகி

 
 
பாலிவுட் நடிகையாக இருந்தாலும் ப்ரியங்கா சோப்ரா, முதன்முதலில் ஹீரோயினாக களமிறங்கியது என்னவோ கோலிவுட்டில் தான். விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ப்ரியங்கா சோப்ரா, தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், குறிப்பாக என்னுடைய முதல்பட ஹீரோ விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆவலாய் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
கடந்த சிலதினங்களுக்கு முன்னர், சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் இறுதிபோட்டியை காண சென்னை வந்திருந்தார் ‌ப்ரியங்கா. அப்போது பேட்டியளித்த அவர், சினிமாவில் நான் அறிமுகமானது கோலிவுட்டில் தான். முதல்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தேன். விஜய் மீது எனக்கு எப்பவும் ஒரு தனி ப்ரியம் உண்டு. அவருடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது. விஜய் மட்டுமல்லாது இங்குள்ள பல ஹீரோக்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ் சினிமா முன்பை விட, இப்போது பலமடங்கு மாற்றம் கண்டுள்ளது. அருமையான கதை, பாடல், நடனம், சண்டைக்காட்சி என்று தமிழ் சினிமாக்காரர்கள் மிரட்டுகின்றனர்.
 
சமீபத்திய சில தமிழ் படங்களை பார்த்து நான் வியந்து போனேன். எனக்கும் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அதிலும் குறிப்பாக என்னுடைய முதல் ஹீரோ விஜய்யுடன், மீண்டும் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன். எனது கனவு நிறைவேறினால் மிகழ்ச்சியடைவேன். அதேசமயம் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் இருந்தாலும் கொஞ்சம் பயமும் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இங்குள்ள ஹீரோக்களுக்கு சமமாக எப்படி ஆடப்போகிறேன் என்ற கவலை மட்டும் தான் என்கிறார்.
 
சென்னை தனக்கு ரொம்ப பிடித்த ஊர் என்றும், சென்னை வந்து இறங்கியதும் ஹோட்டலில் நான் ஆர்டர் செய்யும் முதல் அயிட்டம் மீன் குழம்பு தான். சென்னை மீன் குழம்புக்கு நான் மிகப்பெரிய ரசிகை என்றார். கூடவே சென்னையில் தனது உறவினர்கள் வீடு இருக்கிறது, இருந்தும் நான் இதுவரை சென்னையை முழுசா சுற்றி பார்த்தது இல்லை என்று கூறும் ப்ரியங்கா, யாராவது எனக்கு சென்னையை முழுசா சுற்றி காண்பிக்க முன் வருவீர்களா என்று கேட்கிறார்.



No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts