ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்... இப்படி வரும் விஜய்யின் பஞ்ச் டயலாக்குகளை கேட்பதற்காகவே காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இவர்களை குஷி படுத்துவதற்காகவாவது பஞ்ச் தேடி மண்டை கிழிய யோசிக்கிறார்கள் அவரை வைத்து படம் எடுக்கும் டைரக்டர்கள். விரைவில் வெளிவரப் போகும் வேலாயுதம் படத்தில் விஜய்யின் அதிரடி ஆக்ஷன்தான் பரபர... அதைவிட பரபர அவரது பஞ்ச் டயலாக்தானாம்.
வேலாயுதம் ட்ரெய்லரில், 'உழைக்கிறவன் வியர்வை தாய்பாலை விட உயர்வானது' என்றொரு பஞ்ச் டயலாக்கை பேசுவார் விஜய். இதற்கு நாடெங்கிலும் இருந்து ஏராளமான பாராட்டுகள் கிடைத்ததாம் டைரக்டர் ராஜாவுக்கு.
ஒரு பஞ்ச்சுக்கே இப்படி என்றால் மற்றதை கேட்க வேண்டுமே? 'நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன். இது நீ வேற காட்டு காட்டுன்னு சொல்ற. காட்டாம இருந்தா நல்லாயிருக்குமாங்ணா...?' ஃபைட் சீனுக்கு முன்னால் இப்படி ஒரு பஞ்ச் அடிக்கிறாராம் விஜய்.
அதைவிட இன்னொரு முக்கிய நியூஸ். பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் திறந்த உடம்புடன் ஒரு ஃபைட் பண்ணியிருக்கிறார். மேல் சட்டையில்லாமல் ஒரு ஃபைட் இருக்கு என்றவுடன், 'இந்த பாடி போதுமா?' என்று சட்டையை கழற்ற¤ காட்டினாராம். ஜிம்முக்கு போய் சும்மா கல்லு மாதிரி வச்சுருக்கார் என்று ராஜாவே அசந்து போகிறார்.
ஓங்கி அடிங்ணா... ஒன்றரை தீபாவளி சவுண்டு கேட்கட்டும்!
No comments:
Post a Comment