Wednesday, November 2, 2011

வேலாயுதம் படக்குழுவினருக்கு நடிகர் விஜய் விருந்து

 
 
 
விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடித்த "வேலாயுதம்" படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடுவதாக விஜய் தெரிவித்தார். கேரளாவில் அதிக பிரிண்ட்களுடன் கூடுதல் தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளன.உலகம் முழுவதும் சுமார் 830 திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளது.
இப்படம் முதல் ஐந்து நாட்களில் ரூ.40 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது. "வேலாயுதம்" வெற்றி பெற்றதற்காக விஜய் தனது வீட்டில் அப்படக்குழுவினருக்கு விசேஷ விருந்து அளித்தார்.
இதில் இயக்குனர் ராஜா, இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்."வேலாயுதம்" படத்தின் கதை விவாதத்தில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம்ரவியும் விருந்துக்கு வந்திருந்தார்.
தமிழகம் முழுவதும் "வேலாயுதம்" படம் திரையிடப்படும் தியேட்டர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது. சென்னை வடபழனியில் 7 ஆம் அறிவு படம் திரையிடப்பட்ட கமலா தியேட்டரில் தற்போது வேலாயுதம் படம் திரையிடப்பட்டு உள்ளது. அத்தியேட்டருக்கு விஜய் ரசிகர்கள் வடபழனி கோவிலில் மொட்டை அடித்து விட்டு ஊர்வலமாக வந்து படம் பார்த்தனர். பால் குட ஊர்வலமும் நடந்தது. இயக்குனர் ராஜாவும் அத் தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்தார்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts