Wednesday, November 2, 2011

வேலாயுத சந்தோஷத்தில் விஜய்

 
 
விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவந்த படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வெளியிட்டார்.

'ஏழாம் அறிவு' படத்துடன் 'வேலாயுதம்' படம் போட்டியிட்டது. ஏழாம் அறிவு படம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், 'வேலாயுதம்' 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டது.

'ஏழாம் அறிவு' நேற்று வரை ( அக்டோபர் 31 ) 40.25 கோடியும், 'வேலாயுதம்' 40 கோடியும் வசூல் செய்துள்ளன. குறைந்த தியேட்டர்களில் வெளியிட்டாலும் 40 கோடி வசூல் செய்ததால் விஜய் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

விஜய் இதற்காக தனது வீட்டில் ஜெயம் ராஜா, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினருக்கு விருந்து அளித்தார். சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் இரண்டு அரங்கத்திலும் 'ஏழாம் அறிவு' படத்தினை திரையிட்டு இருந்தார்கள். இன்று முதல் அதில் ஒரு அரங்கில் 'ஏழாம் அறிவு'க்கு பதிலாக 'வேலாயுதம்' திரையிட்டு இருக்கிறார்கள்.

இரண்டாம் வாரத்தில் நிறைய தியேட்டர்களில் 'வேலாயுதம்' படத்தினை திரையிட முன்வந்ததை அடுத்து மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் விஜய்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts