விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் துப்பாக்கி திரைப்படத்தை ஜெமினி நிறுவனம் வாங்கியுள்ளது. |
இந்த வருடத்தின் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் உருவாகி வரும் திரைப்படம் துப்பாக்கி. |
ஏ.ஆர்.முருகாதாஸ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாகவும், காஜல் அகர்வால் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தின் வெற்றியையடுத்து நடிகர் விஜய் தன் உயர் நிலையை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில் தற்போது துப்பாக்கி திரைப்படத்தை ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் வாங்கியுள்ளது.
இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment