நண்பன் படத்தில் யாருக்கு பெயர் கிடைத்ததோ இல்லையோ, சத்யனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு செய்கிறார்கள் ரசிகர்கள். இதனை அப்படியே கட்டிக் காக்க சத்யன் செய்திருக்கும் அதிரடி வேலை, யாருக்கும் கால்ஷீட் தராமல் கதவடைத்தது.
நண்பனுக்கு முன்பே துப்பாக்கியில் நடிக்க சத்யன் ஒப்புக் கொண்டிருந்தார். இந்த ஒரு படத்தில் மட்டுமே இவர் நடித்து வருகிறார். துப்பாக்கியில் இவர் விஜய்யின் நண்பராக படம் நெடுக வருகிறார். மொத்தம் 55 நாட்கள் கால்ஷீட் தந்துள்ளார். நண்பனைப் போல இதுவும் தனது கேரியரின் முக்கியமான படம் என்று அவர் நம்புவதால்தான் இந்த தாராளம்.
நண்பனில் கிடைத்த பெயரை கண்ட படங்கள் செய்து காலி பண்ணக் கூடாது என்பதற்காகதான் மற்ற படங்களில் நடிக்காமலிருக்கிறாராம். கதை பிடித்திருந்தால் மட்டுமே இனி கால்ஷீட்டாம்.
நண்பா… இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா?
No comments:
Post a Comment