Sunday, February 12, 2012

‘ரசிகர்கள் எல்லோரையும் என் நண்பர்களாகத் தான் பார்க்கிறேன்”

 

விஜய் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி" படத்தின் படப்பிடிப்பு இடைநிறுத்தப் பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திரையரங்குகளுக்கு சென்று நண்பன் படத்தினை விளம்பரப்படுத்தி வருகிறாராம் விஜய். இதன் ஓர் அங்கமாகவே 'நண்பன்" படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக மதுரைக்கு சென்ற விஜய் அங்கு நண்பன் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கொன்றில் இரசிகர்களைச் சந்தித்துள்ளாராம்.

சந்தித்தது மாத்திரமா அவர்களுடன் இரண்டொரு வார்த்தைகளையும் பேசியுள்ளாராம்!

'என்னுடைய ரசிகர்கள் எல்லோரையும் என் நண்பர்களாகத் தான் பார்க்கிறேன். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு மனிதனுக்கு எதிர்பாராதவிதமாக பெற்றோர் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் 'நண்பன்" இல்லாமல் இருக்க முடியாது.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் வெற்றி பெற அவர்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

எனது ரசிகர்களுக்கும் நான் அதைத்தான் கூறுவேன். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு விருப்பமான துறையைத் தெரிவு செய்தால் அதில் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்".

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts