பெப்சி, தயாரிப்பாளர்கள் சங்க கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது நடிகர்களுக்கு பல வகையில் வசதியாகிவிட்டது. சிலர் ஓய்வு எடுக்கிறார்கள், சிலர் டூர் கிளம்பியிருக்கிறார்கள். விடுமுறையை ஆக்கப்பூர்வமாக செலவழிப்பது நடிகர் விஜய்.
நடிப்பதற்கு அடுத்து விஜய்க்கு சந்தோஷமான விஷயம் ரசிகர்களை சந்திப்பது. ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் விஜய் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு விஜயம் செய்வார். ரசிகர்களை சந்திப்பார், ஏழைகளுக்கு உதவிகள் செய்வார்.
இந்தமுறை நண்பன் வெளியாகியிருக்கிறது. விஜய் கேரியரில் முக்கியமான படம். அதனால் உற்சாகமாக தனது பயணத்தை தொடர்கிறார். பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து நண்பன் பாட்டு பாடி அவர்களை மகிழ்வித்தவர் மதுரை தங்க ரிகல் திரையரங்குக்கும் சென்றார். ரசிகர்களை சந்தித்தார். மனவளர்ச்சி குறைந்தவர்களுக்கு உதவிகளும் வழங்கினார்.
விருதுநகர் அப்ஸரா திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் பேசியவர், சத்யராஜுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவு நண்பன் மூலம் நிறைவேறியது என்றார். நண்பன் படமும், விஜய்யின் விஜயமும் அவரது இமேஜை மேலும் உயர்த்தியிருக்கிறது.
No comments:
Post a Comment