Monday, February 20, 2012

விருது பெற்ற மகிழ்ச்சியில் இளையதளபதி விஜய்


எடிசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இரண்டு விருதுகளை வாங்கிய மகிழ்ச்சியில் இளையதளபதி விஜய் உள்ளார்.
சமீபத்தில் விஜய், சிறந்த நடிகருக்கான எடிஷன் விருது மற்றும் வேலாயுதம் படத்தில் சிறப்பாக நடித்ததற்கு "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" விருது என இரண்டு விருதுகளை பெற்றார்.
இதுகுறித்து இளையதளபதி விஜய் கூறியிருப்பதாவது, இந்த வருடத்தின் தொடக்கம் எனக்கு மகிழ்ச்சிகரமாக அமைந்துள்ளது.
தொடர்ந்து வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய நல்ல படங்களில் நான் நடிப்பேன் என்று நம்பிக்கை வைத்துள்ளேன்.
தற்போது எனது நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் நடிக்கிறேன்.
இது ஆக்ஸன் தீப்பொறி பறக்கும் படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் நிச்சயம் நிறைவேற்றும் என்று இளைய தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts