Friday, November 18, 2011

"விரைவில் இலங்கைக்கு செல்வேன்" - நடிகர் விஜய்

 
விரைவில் இலங்கைக்கு செல்ல உள்ளதாக நடிகர் விஜய் கூறினார். இது பற்றி அவர் சென்னையில் கூறியதாவது. வேலாயுதம் வெற்றிக்கு காரணம் ரசிகர்களின் ஆதரவுதான். ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 'நண்பன்´ பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன் படங்களில் நடிக்கிறேன். 'தெய்வத் திருமகள்' பட இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளேன்.

ஏற்கனவே ஒப்புக்கொண்ட 2 படங்களில் நடித்து முடிக்க 2 வருடம் ஆகும். அதன்பிறகே இப்படத்தில் நடிப்பேன். 'சீமான் இயக்கத்தில் எப்போது நடிக்கப்போகிறீர்கள்?Õ என்கிறார்கள். என்னுடைய ரசிகர்களில் ஒரு சாரார் அவர் படத்தில் நடிக்க சொல்கிறார்கள். இன்னொரு சாரார் நடிக்க வேண்டாம் என்கிறார்கள்.

நான் என்ன செய்ய முடியும்? இலங்கையில் உள்ள ரசிகர்கள் எப்போது இலங்கை வரப்போகிறீர்கள் என்கிறார்கள். 'கில்லி´ பட வெற்றியின்போது 2004ம் ஆண்டு இலங்கை தியேட்டருக்கு சென்று ரசிகர்களை சந்தித்தேன். விரைவில் இலங்கைக்கு செல்வேன். இவ்வாறு விஜய் கூறினார்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts