பிரபல மலையாள இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில், ப்ருத்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யாபாலன், தபு, நித்யா மேனன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து சிலமாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் வெளிவந்த படம் உருமி. 15ம் நூற்றாண்டை மையப்படுத்தி, சரித்திர படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் டைரக்டர் சந்தோஷ் சிவன். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டாகியுள்ள இப்படம் தமிழிழும் அதே பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடந்தது.
இந்தவிழாவில் நடிகர் விஜய், டைரக்டர்கள் மணிரத்னம், எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். படத்தின் ஆடியோ சி.டி.யை நடிகர் விஜய் வெளியிட அதை வைரமுத்து பெற்றுக்கொண்டார். விழாவில் நடிகர் விஜய்க்கு அன்பளிப்பாக, சுருள் வாளை டைரக்டர் சந்தோஷ் சிவன் பரிசளித்தார். வாளை கையில் எடுத்த அடுத்த நிமிடமே எம்.ஜி.ஆர்., ஸ்டைலில் ஒரு சுழற்று சுழற்றினார் விஜய். அது எதிர்பாரா விதமாக அருகில் நின்றிருந்த வைரமுத்து மீது பட சற்றென்று பயந்து விலகினார்.
வைரமுத்து மீது அப்படி என்ன கோபமோ நடிகர் விஜய்க்கு! அது அவருக்கே வெளிச்சம்!!
No comments:
Post a Comment