'வேலாயுதம்' படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் விஜய். இப்படத்தினை விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க இருக்கிறார்.
இப்படத்தின் பெயர், நாயகி, எப்போது படப்பிடிப்பு என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தின் ஆரம்ப காட்சிகளை திருச்செந்தூரில் எடுக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். திருச்செந்தூரில் ஆரம்பிக்கும் கதை மும்பைக்கு பயணிக்குமாம். கடலுக்கு அருகில் திருச்செந்தூர் கோவில் அமைந்து இருப்பதால் இக்கதைக்கு ஏற்றவாறு இருக்கும் என்று இப்படி முடிவெடுத்தார்களாம். மும்பையில் தான் பெரும்பகுதி படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
படத்தின் நாயகியாக ப்ரியங்கா சோப்ரா இருக்கலாம் என்கிறது படக்குழு.
கதைப்படி படத்தில் இரண்டு நாயகிகள் வேண்டுமாம். ப்ரியங்கா சோப்ராவுடன் '180' படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் இன்னொரு நாயகியாக நடிக்கலாம் என்கிறார்கள்.
No comments:
Post a Comment