எடிசன் பெயரில் வருடம்தோறும் திரைத்துறையினருக்கு விருது வழங்கி வருகிறார்கள். இது ஐந்தாவது வருடம். இந்த வருடம் சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறவர், விஜய்.
ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்த வேலாயுதம் படத்துக்காக விஜய் இந்த விருதை பெற்றுள்ளார். நண்பன் வெற்றியில் மகிழ்ந்துப் போயிருப்பவருக்கு இது கூடுதல் மகிழ்ச்சி.
வேலாயுதம் முழுமையான வெற்றியை பெறவில்லை, அது ஒரு கமர்ஷியல் சினிமா, விஜய் வழக்கம் போல பன்ச் வசனம் பேசி நடித்திருக்கிறார், மற்றபடி சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தவில்லை என்று புரணி பேசியவர்களின் பிடரியில் இந்த விருது ஒரு போடு போட்டிருக்கிறது.
சந்தோஷம்தானே தளபதியின் கோடானு கோடி ரசிகர்களே?
No comments:
Post a Comment